சாமியால் வந்த வினை.! சூரியை எச்சரித்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

0
702
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களில் நடித்துவிட்டார்.

-விளம்பரம்-

Soori

- Advertisement -

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான “சாமி 2” படத்திலும் நடிகர் சூரி காமெடியான நடித்துள்ளார்.இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் சூரி, ஒருவரை அடிப்பது போல காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் நடிகர் சூரி, ஓணாபதியா இருந்தா என்ன, அம்பிகாபதியா இருந்தா என்ன. ஏன், விஜய் சேதுபதியா இருந்தா என்ன,இன்னைக்கு விடமாட்டேன் என்று கூறி ஒருவரை அடிப்பது போல காட்சி அமைந்துள்ளது.

இந்த காட்சியில் நடிகர் சூரி, விஜய்சேதுபதி பெயரை குறிப்பிட்டுள்ளது தான் தற்போது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே சூரி மீது கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியை, சூரி அசிங்கப்படுத்திவிட்டார் என்று போஸ்டர் அடித்துள்ள விஜய்சேதுபதியின் ரசிகர்கள், “சாமி 2” படத்தில் எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி பெயரைச் சொல்லி சூரி மற்றவர்களை அடிக்கும் காட்சி உள்ளது.

-விளம்பரம்-

vijay sethupathi

திரையில் வேண்டுமானால் நீ(சூரி) அவரை அடிக்கும் காட்சிகளை வைக்கலாம். ஆனால், நிஜத்தில் நீ அவர் நிழல் உயரம் கூட வரமாட்டாய். “சாமி 2” படத்தில் வரும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சூரிக்கு இது எச்சரிக்கை என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதியுடன் “ரம்மி” படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் விஜய் சேதுபதி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூரி மீது விஜய் சேதுபதி ரசிகர்கள் வைத்துள்ள இந்த குற்றசாட்டு பெரும் நடிகர் சூரிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

Advertisement