‘என்ன ரொம்ப கொடும படுத்துறாங்க’ – புலம்பி வீடியோ வெளியிட்ட விஜய் டிவி ஜாக்லின்.

0
332
- Advertisement -

விஜய் டிவியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் ஜாக்லின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கணவர் செய்த கொடுமை, ஓராண்டில் விவாகரத்து, கைகொடுக்காத சினிமா – மின்சார கண்ணா பட நடிகையின் தற்போதைய நிலை.

டிவி டூ சினிமா :

அதைன் பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் தேன்மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதால் இந்த சீரியலை திடீரென்று நிறுத்தினர். அதன் பின்னர் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார் ஜாக்லின்.

-விளம்பரம்-

விஜய் டிவி பக்கமே வராத ஜாக்லின் :

ஆனால் சமீப காலமாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை கூட இவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது இவருக்கு பதிலாக மைனா தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்லினின் Transformation :

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட இவரை காண முடிவதில்லை. அதேபோல இவர் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே தற்போது ஜாக்குலின் தீவிர உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனியாக ஒரு பயிற்சியாளரை வைத்து கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்து வருகிறார் ஜாக்லின்.

புலம்பி ஜாக்லின் வெளியிட்ட வீடியோ :

அந்த வகையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜாக்லின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது பயிற்சியாளர் தன்னை மிகவும் கொடுமை படுத்துகிறார் என்றும் தனக்கு மயக்கம் வருகிறது, வாந்தி வருகிறது அப்பயும் எல்லாம் நார்மல்னு சொல்றாங்க என்றும் கதறி இருக்கிறார் ஜாக்லின்.

Advertisement