அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு உடையா..? டிடி-யை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே..!

0
4514
dhivya dharshani

விஜய் டிவி தொகுப்பாளினிகள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். விஜய் டிவியின் ஆஸ்தான பெண் தொகுப்பாளினியான இவர் அந்த தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

dd

விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்கியை தொகுத்து வழங்கிவந்த இவர் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இதனால் விஜய் டிவியில் இருந்து அவர் விலகிவிட்டாரோ என்று பலரும் நினைத்தனர். ஆனால் தற்போது விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான “என்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறிவிட்டார் டிடி.

டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அசத்தலான மாடல் உடைகளிலோ,அல்லது ட்ரெடிஷனலான புடவைகளை அணிந்து தான் தொகுத்து வழங்குவார். ஆனால் சமீபத்தில் “என்கிட்டே மோதாதே ” நிகழ்ச்சிக்காக வேட்டி மற்றும் சட்டையில் தர லோக்கல் கெட் அப்பில் வந்துள்ளார் டிடி.

anchor dd

இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிடி.”கத்திரி வெயில் அதனால் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டேன் “என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கோடை ஆடையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.