36 வருடங்களுக்கு முன்னரே உலகநாயகனின் விக்ரம் படத்திற்கு திரையரங்கில் கூடிய ரசிகர்களின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.
விக்ரம் திரைப்படம்:
இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், படத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க செல்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.
விக்ரம் படம் பற்றிய தகவல்:
ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். ஆகையால், விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரப்பு மாஸாக இருக்கிறது. இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார்.
கமல் கொடுத்த பரிசு:
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஸுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல். இந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருக்கின்றனர். இந்நிலையில் கமலஹாசனின் பழைய விக்ரம் படத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
வைரலாகும் புகைப்படம்:
இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன், சத்யராஜ், அம்பிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸின்போது திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் பயங்கரமாக திரண்டிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அடேங்கப்பா இவ்வளவு கூட்டமா! என்று வியப்பில் கூறி வருகிறார்கள்.