நடிகர் விக்ரமின் மகன் துருவ் ‘வர்மா’ என்ற படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாக இருந்தார். தெலுங்கில் வெற்றியடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக்கை இயக்குனர் பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்து. ஆனால், சில பல காரணங்களால் இந்த படம் வெளியிடபடாமல் கைவிடபட்டது.
தற்போது இந்த படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் முதலில் இருந்து எடுத்து வருகின்றனர். இந்த படத்தை ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரி சாயா என்பவர் இயக்க உள்ளார். மேலும், வர்மா படத்தில் இருந்த யாரும் ஆதித்யா வர்மா படத்தில் இல்லை.
இதையும் படியுங்க : ஆதித்யா வர்மா நடிகை இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளாரா.! அப்போ படத்துல சம்பவம் இருக்கு.!
மேலும், இந்த படத்தில் துருவ் ஜோடியாக பனிதா சந்து என்பவர் நடிக்கிறார்.வர்மா படம் தான் துருவ்வின் முதல் படமாக இருந்தது ஆனால், தனது முதல் படமே இப்படி ஒரு தடங்களை சந்தித்துள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் துருவ்.
இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்காமல் இருந்து வருவதால் ஹாயாக இருந்து வருகிறார் துருவ். சமீபத்தில் நடிகர் விக்ரமும் துருவும் இணைந்து சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதில் பார்ப்பதற்கு இருவரும் ஒரே கெட்டப்பில் இருக்கின்றனர்.