கர்ணன் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கே சென்று பாராட்டிய கரிகாலன் (விக்ரம்) – இதோ புகைப்படம்.

0
2385
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம் நேராக மாரி செல்வராஜின் வீடு தேடிச் சென்று அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பலரும் கரணனை பாராட்டிய கரிகாலன் என்று பதிவிட்டு வருகின்றனர். கர்ணன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement