கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
இதுவரை தமிழ் நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற பல்வேறு நடிகர்கள் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்கு பண உதவியினை செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது 35 லட்சத்திற்குண்டான காசோலையை கேரள முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 19) 35 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலைமச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார் நடிகர் விக்ரம். கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து தமிழ் மக்களும், தமிழ் நடிகர்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது சகோதர மாநிலமான கேரா மக்கள் இந்த பேரிடரிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிராத்திப்போம்.