அது கிடைக்கவில்லை என்பதால் என் கணவரை விட்டு வந்துவிட்டேன், அவருக்கு இப்போ வேற கல்யாணம் ஆகிடிச்சி. முதன் முறையாக விவகாரத்து குறித்த காரணத்தை சொன்ன இசைவாணி.

0
1080
isaivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இசைவாணியும் ஒருவர். இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர்.இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை. மேலும், ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது துறையில் இவருடைய கனவு, லட்சியம்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசையை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்து வந்த பாதை டாஸ்கில் இவருக்கு திருமணம் ஆனதை பற்றி பேசவே இல்லை. பின் இவர் பவானி ரெட்டியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி பேசினார்.

- Advertisement -

இசைவாணி குறித்து தோழிகள் சொன்னது :

அதைக்கேட்ட இசைவாணி அவளைத் தேற்றும் விதமாக தன்னுடைய திருமண முறிவை பற்றி அவரிடம் மட்டும் ரகசியம் சொன்னார். அதன் பின்னரே இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இசைவாணி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய இசை வாணியின் தோழிகள், அவளின் திருமண வாழ்க்கை கண்டிப்பாக சரியாக இருக்காது என்று தெரிந்தும் அவள் எவ்வளவோ அதை இழுத்துப் பிடித்தால்.

ஆனாலும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னர் அவள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தால் நாங்கள் தான் அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தோம் என்று கூறியிருந்தனர். பின்னர் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த இசைவாணி பேட்டி ஒன்றில் பேசிய போது நான் திருமணமானதை மறைத்து விட்டேன் என்று பலர் சொல்கிறார்கள் .

-விளம்பரம்-

விவகாரத்தை மறைத்தது ஏன் :

ஆனால், நான் மறைக்கவில்லை அதை நான் தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வரவும் இல்லை. ஆனாலும், அதை பற்றி நிறைய பேர் கேலி செய்தார்கள். ஆனால், இதற்கு பின்னரும் நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இசைவானி முதன் முறையாக விவாகரத்தான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

விவாகரத்துக்கு காரணம் :

அதில் ”கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. casteless bandனு நான் தான் முதல் பெண்ணாக எடுத்து வைத்தேன். நான் போய் இருந்தால் நிறைய பெண்கள் அதற்குள் இன்னும் வந்து இருப்பார்கள். ஆனால், புகுந்த வீட்டில் அதற்காக ஆதரவு கிடைக்கவில்லை. அங்கே சென்று இருந்தால் இசைவாணி என்ற பெயரோடு போய் இருக்கும். அங்கிருந்து வந்ததால் தான் inspire என்ற வார்த்தைக்கு நான் தகுதியாக இருக்கிறேன். இப்போ நான் அந்த குடும்பத்துடன் டச்ல இல்ல அவருக்கு வேறு கல்யாணம் ஆகிடிச்சி.

Advertisement