முனகல் Bgmஐ லைவ்வாக கேட்க ஆசைப்பட்ட Vj – மாயா கொடுத்த நச் பதில். செருப்படி பதில் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
991
- Advertisement -

விக்ரம் படத்தில் இடம்பெற்ற முனகல் சத்தத்தை பேட்டியில் கொடுக்க சொன்ன தொகுப்பாளனிக்கு செம செருப்படி பதில் கொடுத்து இருக்கிறார் மாயா. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : டைட்டில் வின்னருக்கு கூட கிடைக்காத வாய்ப்பு – சூப்பர் சிங்கர் 8 பிரபலத்துக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.

விக்ரம் திரைப்படம்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல்.

-விளம்பரம்-

கமல் கொடுத்த பரிசு:

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல். மேலும், இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 25 நாட்களே கடந்துள்ள போதும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த அளவிற்கு விக்ரம் படம் மக்களை கவர்ந்திருக்கிறது.

படத்தில் மாயா ரோல்:

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் விபச்சாரியாக நடித்தவர் மாயா. இவருடைய கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். அதவும் இவர் நடித்த காட்சியில் இவர் முனகிய சத்தத்தை வைத்தே Bgm போட்டு அசத்தி இருப்பார் அனிருத்.

மாயா அளித்த பேட்டி:

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாயா விக்ரம் படத்தில் நான் விபச்சாரியாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் என்னுடைய வேலை. நான் பெரிய உத்தமி இல்லை என்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் தொகுப்பாளினி ஒருவர் ‘எனக்கு அந்த சவுண்டு live அ கேக்கணும்னு ஆசை’ என்று கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த மாயா ‘அப்படினா நீங்க, யாரையாவது கூட்டிட்டு எங்கியாவது போங்க அந்த சவுண்டு லைவ்வா கேப்பீங்க’ என்று பதில் கொடுத்துள்ளார். மாயாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் பலர் ‘கேனத்தனமா கேள்விய கேட்டு இப்படித்தான் செருப்படி வாங்கிக்குறது’ என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement