‘உண்மையான அண்ணாத்தே நான் தான்’ – ரஜினியின் அண்ணாத்தே பாடலின் வாழ்நாள் சாதனையை 12 மணி நேரத்தில் முறியடித்த பத்தல பத்தல பாடல்.

0
444
annathe
- Advertisement -

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிற நடிகர்கள் இவர்களால் ஈர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டி இருக்கின்றனர். மேலும், இந்த இரண்டு மாபெரும் நடிகர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் கூட மகத்தான ஒன்றாக இருந்து வருகிறது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதால் இருவரும் ஒன்றாக திரை இடத்தைப் பகிரத் தொடங்கிய நாளிலிருந்து சிறந்த நண்பர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், ரஜினி மற்றும் கமல் பல்வேறு விதமான விருதுகளை பெற்று இருக்கின்றனர். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அண்ணாத்த. இந்த படம் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

ரஜினியின் அண்ணாத்த படம்:

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து உருவாகி இருந்த படம் தான் அண்ணாத்த. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினி அண்ணாத்த படத்தின் லைப் டைம் லைக்ஸ்கை 12 மணி நேரத்தில் கமலின் பத்தல பத்தல பாடல் பெற்றிருக்கிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம்.

கமலின் விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் முதல் பாடல்:

மேலும், மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் கமலின் வரி மற்றும் குரலில் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் 12 மணி நேரத்தில் ரஜினியின் முதல் பாடலின் லைக்ஸ்ஸை முறியடித்து இருக்கிற தகவல் வைரலாகி வருகிறது.

ரஜியின் பாடலை முறியடித்த கமல் பாடல்:

கமலின் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி 12 மணி நேரத்திலேயே ரஜினியின் அண்ணாத்த படத்தின் மொத்த லைப் டைம் லைக்ஸை 12 மணி நேரத்தில் பெற்றிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலர் கமலின் புகைப்படத்தை பதிவிட்டு ரியல் அண்ணாத்த பேக் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், அந்த கமலின் பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement