ரஸ்யாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை செய்துள்ள விக்ரம். இயக்குனரே சொன்ன வீடியோ இதோ.

0
1714
cobra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் விக்ரம். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. மேலும், நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

-விளம்பரம்-
Image result for vikram cobra

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது. சமீபத்தில் தான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. தற்போது விக்ரமின் கோப்ரா படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து உள்ளார். அதில் அவர் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நாள் படப்பிடிப்பில் இர்பான் ஓய்வில் இருந்தார்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:33 நிமிடத்தில் பார்க்கவும்

அப்போது ஒரு ரஷ்ய நாட்டினர் போல் ஒருவர் வந்து படக்குழுவினரிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். மேலும், நீங்கள் யார் எங்கள் நாட்டில் வந்து ஷூட்டிங் நடத்திறீங்க என்று ரகளை செய்தற். ஒரு கட்டத்திற்கு மேல் அனைவர்க்கும் கோபம் வந்து இந்த ரஷ்யக்காரரை கூட்டிட்டு போங்க என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அந்த ரஷ்ய நாட்டுக் காரர் விக்ரம் தான் என்று பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது. விக்ரமே நான் தான் விக்ரம் என்று சொல்லுமளவிற்கு யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவரும் பயங்கரமாக சிரித்து இருத்தோம். இந்த நிகழ்வை எங்களால் மறக்க முடியாது என்று கூறினார்.

Advertisement