பஞ்சதந்திரம் நடிகர்களை வைத்து விக்ரம் படத்தை Promotion செய்த கமல் – வீடியோவை கண்டு பார்ட் 2வை எதிர்பார்க்கும் ரசிகர்கள்.

0
120
vikram
- Advertisement -

பஞ்சதந்திரம் படத்தில் நடித்த நடிகர்களை வைத்து விக்ரம் பட ப்ரோமோஷனை செய்துள்ளார் கமல். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
vikram

மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார்.

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம் :

இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது.

Promotion செய்த பஞ்சதந்திரம் கேங்க் :

சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா படு கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் படத்தில் ப்ரோமோஷனில் படு பயங்கரமாக இறங்கி இருக்கிறார் கமல். அந்த வகையில் கமல் நடித்த பஞ்ச தந்திரம் படத்தில் உடன் நடித்த நடிகர்களை வைத்து விக்ரம் பட ப்ரோமோஷனை படு வித்யாசமாக செய்துள்ளார் கமல். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் :

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் பஞ்சதந்திரம். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ஜெயராம், நாகேஷ், ஸ்ரீமன், யூகிசேது, மணிவண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இருந்தது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

panjathanthiram

பஞ்சதந்திரம் பார்ட் 2 வந்தால் :

இந்த படத்தை திரையரங்கில் பார்த்ததை விட டிவியில் பார்த்து ரசித்தவர்கள் தான் அதிகம். தற்போது கூட இந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கமல் இதுவரை விஸ்வரூபம் படத்தை மட்டும் தான் இரண்டு பாகங்களாக எடுத்தார். இந்தியன் 2வின் இரண்டாம் பாகமும் கைவிடப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பஞ்சதந்திரம் பார்ட் 2 வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement