விக்ரம் 61 படத்தின் பூஜையில் விக்ரம் விபூதியை தவிர்த்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : எனக்கு ஏன் பாடுவதற்கு வாய்ப்பு வரவில்லை – மறைந்த பாடகர் SPBயின் மகன் Spb சரண் ஆதங்கம்.
கோப்ரா படம்:
அதாவது, நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி படத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
பொன்னியின் செல்வன்:
ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் எதிர்பார்த்திருந்த வெளியாகி இருக்கிறது.
விக்ரம் 61 படம்:
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விக்ரம் நடித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது விக்ரம் 61ஆவது திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்நிலையில் இதற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார். அதேபோல் படக்குழுவினர் விக்ரம், பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்ட குழுவினருக்கு அர்ச்சகர் விபூதி இட்டு மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.
விபூதியை தவிர்த்த விக்ரம்:
அப்போது ஒவ்வொருவருக்கும் விபூதி வைத்த அர்ச்சகரிடம் நடிகர் விக்ரம் வேண்டாம் என்று பணிவாக தவிர்த்து விட்டார். விக்ரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விபூதி வைக்க வேண்டாம் என அர்ச்சகரிடம் தெரிவித்தார். ஆனால், நடன இயக்குநர் சாண்டி தனக்கு விபூதி வைத்து விடுமாறு கேட்டு வைத்துக் கொண்டார். இந்த நிகழ்வுகளை இயக்குனர் பா ரஞ்சித் பார்த்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.