இணையத்தில் வைரலாகும் ஷங்கர், ரஹமான், விக்ரமின் மகன்களின் புகைப்படம். ஷங்கர் மகன பார்த்திருக்கீங்களா.

0
1371
1
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் திரை உலகில் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் கடைசியாக கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தான் இயக்க உள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் விக்ரம் ஆரம்ப காலத்தில் நடித்த எந்த ஒரு படங்களும் வெற்றியடையவில்லை. இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படம் தான். அதன் பின்னர் விக்ரமிற்கு பிரேக் கொடுத்த படம் என்றால் அது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அந்நியன்’ திரைப்படம் தான். அந்த படத்திற்கு பின்னர் இதே கூட்டணியில் ‘ஐ’ படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்று சொன்னதும் நம் நினைவிற்கு முதலில் வருவது இசை புயலாக தான் இருக்கும். இதுவரை ஷங்கர் இயக்கிய ‘நண்பன் ‘ மற்றும் தற்போது இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தை தவிர மற்ற அணைத்து படங்களுக்கும் இசையமைத்தது ஏ ஆர் ரஹ்மான் தான். இப்படி ஒரு நிலையில் ஷங்கர், விக்ரம், ஏ ஆர் ரஹ்மான் ஆகிய மூன்று நபர்களின் மகன்களும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் விக்ரம் மகனான துருவ்வை அனைவரும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நன்கு அறிந்திருப்போம். அதே போல ஏ ஆர் ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீனை கூட அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், இயக்குனர் ஷங்கரின் மகனை இதுவரை பெரும்பாலனோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய பெயர் அர்ஜித். மேலும், ஷங்கருக்கு 2 மகள்களும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement