விக்ரம் மகன் துருவ் இவ்வளவு அழகா பாடுவாரா.! நீங்களே கேட்டு பாருங்க.!

0
895
Dhuruv
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரமின் மகனான துருவ் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், கடந்த சில மாதத்திற்கு முன்னர் இந்த படம் வெளியாவதாக இருந்தது.

-விளம்பரம்-
Image result for dhruv vikram

பின்னர் சில பல காரணத்தால் இந்த படம் கைவிடபடுவதாக அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தை தற்போது இந்த படத்தை
‘அர்ஜுன் ரெட்டி’படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில் இயக்குகிறார்.

இதையும் படியுங்க : ரியோ ஹீரோவாக களமிறங்கியுள்ள ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தின் விமர்சனம்.! 

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞ்சராக திகழ்ந்து வருகிறார். தனது தந்தையை மானசீக குருவாக ஏற்றுள்ள துருவ்வும் தனது தந்தை போலவே பன்முக திறமைகள் கொண்ட நபராக இருக்கிறார். விக்ரம் நடிப்பை தாண்டி பல்வேறு பாடல்களையும் பாடியுள்ளார்.

விக்ரமை போல துருவ்வும் சிறந்த பாடகராக இருக்கிறார். சமீபத்தில் துருவ் ‘நானும் ரௌடி தான் ‘ படத்தில் வரும் ‘தங்கமே உன்னததான்’ என்ற பாடலை கிட்டார் இசையுடன் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் துருவ் இவ்வளவு அழகாக பாடுவாரா என்று ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது ‘ஆத்தியா வர்மா’படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல் நாட்டின் லிப்ஸன் நகரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகலில் நடைபெற்று வருவதாகவும் மேலும் 65% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement