பேட்டயா, விஸ்வசமா? தனுஷா, விஜய்யா? விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்.!

0
965
Dhruv
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ மற்றும் அல்டிமேட் ஸ்டார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வரும் 10 தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படத்தில் எந்த படத்தை முதலில் பார்க்க போகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் விக்ரம் மகன் துருவ்.

-விளம்பரம்-

விக்ரம் மகன் துருவ், வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இது. இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் உள்ளது படக்குழு. இந்நிலையில், தன்னுடைய பர்சனல் விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் துருவ் விக்ரம். அப்போது அவரிடம் 2018 ல் வெளிவந்த எந்த படம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு, வடசென்னை என்று பதிலளித்துள்ளார். அப்போது நீங்கள் தனுஷ் ரசிகரா என்று கேட்டதற்கு, தனுஷை எப்போதுமே பிடிக்கும். ‘மாரி 2’ பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அவருடைய கெத்தே தனி. ஆனால், நான் தளபதி ரசிகன். 

-விளம்பரம்-

மேலும், இந்த வருடம், எந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறீர்கள்?என்று கேள்விக்கு சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்துக்காகக் காத்திருக்கிறேன். கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

Advertisement