கொங்கு மட்டன் பிரியாணி, மதுரை கறிதோசை, விக்ரம் சக்சஸ் மீட்டின் விருந்தை சமைத்தது இந்த நடிகர் தானா – இவரு Chef -ஆம்பா

0
2380
vikram
- Advertisement -

விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டிற்கான விருந்து பட்டியலை தயார் செய்து கொடுத்தவர் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : ‘பாராட்டுக்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? ரஜினியின் ‘ஜெயிலர்’ பதிவு குறித்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

- Advertisement -

பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :

பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல பரிசுகளை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார், விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக், சூர்யாவிற்கு Rolex கை கடிகாரம் என்று கமல் பல பரிசுகளை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டிற்கான விருந்து பட்டியலை தயார் செய்து கொடுத்தவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்:

விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது விழாவின் தொடக்கத்தில் இன்னைக்கு ஒரு பிடி என்ற மனநிலையோடு தான் எல்லோரும் அமர்ந்து இருந்தார்கள். முதலில் வெல்கம் ட்ரிங்க் என்ற பெயரில் வழக்கமான ஜூஸ் போல் இல்லாமல் முருங்கைக்கீரை சூப், கேரட் ஜூஸ், புதினா ஜூஸ் என ஆர்கானிக் ஆரம்பித்திருந்தார்கள். பின் கமல் பேசி ஆரம்பிக்கலாமா என்று சொல்லி விருந்து தொடங்கியது.

-விளம்பரம்-

விருந்து மெனு பட்டியல்:

கமலஹாசன், லோகேஷ் கனகராஜ் என படக்குழு உட்பட 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடத் தொடங்கினார்கள். கேட்டரிங் பொறுப்பு கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘மாதம்பட்டி பாகசாலா’ குழுவினரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. மெனுவில் இருந்தது, நாட்டுக்கோழி சூப், கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, விருதுநகர் ஸ்பெஷல் பன் பரோட்டா, பள்ளிபாளையம் சிக்கன், மதுரை மட்டன் கறி தோசை, இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா என்று அசைவ லிஸ்ட் ஒரு பக்கம்.

மெனுவை தயார் பண்ணவர்:

இன்னொரு பக்கம், வெஜ் சோயாட்டா பிரியாணி, பள்ளிப்பாளையம் வெஜ் கிரேவி, கோவக்காய் சட்னி, கொய்யா சட்னி, பலவகையான தோசைகள், சிறுதானியங்களில் ஒன்றான சாமை தயிர் சாதத்தோடு முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த விருந்தை தயார் செய்தவர் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த விருந்தை சமைத்து அசத்தியதுமெஹந்தி சர்க்கஸ் படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் தான். இவர் ஒரு கைதேர்ந்த Chef என்பது பலர் அறிந்திராத விஷயம்.

Advertisement