சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிர்ணா. இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார். மேலும், ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருப்பதால் மிர்ணாவுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு அக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். ஜெயிலர் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஆனால், மிர்னாவிற்கு முன்பே சமூக வலைதளத்தில் மருமகளாக கொண்டாடப்பட்டது விக்ரம் படத்தில் நடித்த ஸ்வதிஷ்டா தான்.

Advertisement

பிரபல தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஸ்வாதிஷ்டா. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார் ஸ்வாதிஷ்டா. மேலும், சவரகத்தி,கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த படத்தில் இவர் கமலின் மருமகளாக நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்பதால் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ந்து இருந்தது. இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு இளசுகள் பட்டாளம் சேர இவரை பற்றி சமூக வலைதளத்தில் மீம்களை போட துவங்கிவிட்டனர்.

Advertisement

விக்ரம் படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவரது மருமகள் பட்டததிற்கு போட்டியாக ஜெயிலர் படத்தில் நடித்த மிர்னா சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். இவர்கள் இருவரையும் இணைத்து சமூக வலைதளத்தில் பல விதமான மீம்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Advertisement

அந்த மீம்ல் குறிப்பிட்டு இருந்தது என்னவெனில் ‘தமிழ் சினிமாவின் மருமகள்கள் விக்ரம் ஸ்வதிஷ்டா ஜெயிலர் மிர்னா மேனன்’ என்று குறிப்பிட்டு மிர்னா மற்றும் ஸ்வதிஷ்டா ஆகிய இருவரின் புகைப்படங்களும் பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு ரசிகர்கள் பலர் ஸ்வதிஷ்டா என்றும் மேலும் பலர் மிர்னா என்றும் கமண்ட் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த மீமை பார்த்த ஸ்வதிஷ்டா ” என்று பதிவிட்டு ரியாக்ட் செய்துள்ளார்.

Advertisement