’20 வருஷம் என் மூஞ்சி சினிமால தெரியாதானு ஏங்கினேன்’ விக்ரம் படத்தில் அசத்திய Tina யார் தெரியுமா ? இதோ அவரின் பேட்டி.

0
1174
tina
- Advertisement -

விக்ரம் படத்தில் டீனா ரோலில் நடித்த வசந்தி பற்றிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ஏஜன்ட் டினா தான். டினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வசந்தி. இவர் ஒரு டான்ஸர் ஆவார். இந்நிலையில் இவர் விக்ரம் பட அனுபவம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

டினா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பிருந்தா, கலா மாஸ்டர் போன்று பல நடன இயக்குனர்களிடம் துணை நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறேன். அதற்கு பின் தினேஷ் மாஸ்டரிடம் 20 வருடங்களாக துணை நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். நான் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருந்தும் நம்மை பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று பலமுறை நினைத்து வருத்தப்படுகிறேன். திரைக்குப் பின்னால் தான் இருப்போம். இருந்தும் என்னைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது.

-விளம்பரம்-

டினா சண்டை காட்சி:

ஆனால், விக்ரம் படத்தின் மூலம் நான் மக்கள் மத்தியில் அறியப்பட்டது நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு தினேஷ் மாஸ்டர் மூலம் தான் கிடைத்தது. இந்த படத்தில் டினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதுவும் பைட் காட்சிகளில் நடித்தது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த படத்தில் 16 நாள் பணிபுரிந்தேன். அதில் 5லிருந்து 6 நாட்கள் வரை சண்டை காட்சி எடுக்கப்பட்டது. முதல் காட்சியே பகத் பாசில் சாருடன் நடிக்கும் காட்சி. அந்த காட்சியின் போது நான் ரொம்ப பதட்டமாக இருந்தேன். அதற்கு பின்பு பழகி விட்டது.

விக்ரம் பட அனுபவம்:

பைட் மாஸ்டர் அன்பு அறிவு ஒவ்வொரு காட்சிகளையும் அழகாகச் சொல்லித் தந்திருந்தார். அவர்கள் எதிர்பார்க்கும் காட்சி வரும் வரை இயக்குனரும் அன்பறிவு மாஸ்டரும் விடவே மாட்டார்கள். ஆரம்பத்தில் ஃபைட் பண்ணும்போது கூட இருந்த பைட்டர்ஸை நான் அடித்து விட்டேன். விக்ரம் படத்தில் கமல் சார் உடைய படத்தில் நடித்தது நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், இன்னும் எனக்கு அந்த பதட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இருந்தும் என்னுடைய நடனத்தையும் நான் விடமாட்டேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை வசந்தி பகிர்ந்திருக்கிறார்:

Advertisement