சமீபத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு கோப்ரா இசை வெளியிட்டு விழாவில் காலாயான பதிலடி கொடுத்துள்ளார் விக்ரம். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து விக்ரமின் மேலாளர் சூர்ய நாரயணன் வெளியிட்ட பதிவில் ”விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
இதையும் பாருங்க : தேசிய விருது வாங்கின எனக்கு யாரும் வாய்ப்பு தரல, இது தான் என்ன காப்பாத்துச்சு – சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன காரணம் குறித்து சொன்ன சுகன்யா.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் :
இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.
கோப்ரா இசை வெளியிட்டு விழாவில் விக்ரம் :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கோப்ரா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார் விக்ரம். அப்போது மேடையில் பேசுகையில் ‘ஐயோ, கைய இங்க வச்சிட்டனே ஹார்ட் அட்டாக்னு சொல்லிடுவாங்களே. இந்த நாளோட தலைப்பு இப்பவே என் கண் முன்னாடி தெரியுது. அன்றே நாங்கள் கணித்தது போல கோப்ரா மேடையில் ஹார்ட் அட்டாக்கை உறுதி செய்தார் விக்ரம்னு. எனக்கு ஹார்ட் அட்டாக் என்ற செய்திகளை எல்லாம் நான் பார்த்தேன் நன்றாக இருந்தது.
Fake நியூஸ்களை கலாய்த்த விக்ரம் :
சில பேர் வேறு யாரோ ஒரு நோயாளியின் உடலில் என் முகத்தை போட்டு போட்டோஷாப் எல்லாம் செய்திருந்தார்கள், நன்றாகத்தான் இருந்தது, அதற்கு நன்றி. அதையெல்லாம் பார்த்துவிட்டு பரவாயில்லை நான் என்னென்னவோ பார்த்து விட்டோம் இதையெல்லாம் ஒன்றும் கிடையாது என்று தான் தோன்றியது. என்னை பிடித்தவர்கள், என்னுடைய குடும்பம் நண்பர்கள் ரசிகர்கள் நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு ஒன்றுமே ஆகாது. எனக்கு 20 வயது இருக்கும் போது விபத்தில் எனக்கு ஒரு காலையே எடுக்க வேண்டிய இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
20 வயதில் நடந்த விபத்து :
ஆனால், அதிலிருந்தே மீண்டும் நான் வந்து விட்டேன் அதை ஒப்பிடும்போது இது எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஒரு சின்ன அசோவுகிரிரயத்திற்காகத்தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். ஆனால், அதை எடுத்து கச்சா முச்சான்னு என்னென்னவோ போட்டுவிட்டார்கள். அது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் என்னை பிடித்தவர்கள், எனக்கு நெருக்கமானவர்கள் என்னுடைய ரசிகர்கள் பலரும் அதை பார்த்து வருத்தப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் நின்று நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது என்னுடைய கடமை. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி என்று பேசி இருக்கிறார்.