படங்களில் வில்லனாக நடித்த கசான் கான் நிஜத்தில் இப்படி ஒரு நபரா – இயக்குனர் விக்ரமன் சொன்ன உருக்கமான விஷயம்.

0
2287
Vikraman
- Advertisement -

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் கசன்கானின் மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திஇருக்கும் நிலையில் அவரது இறப்பு குறித்து பேசி இருக்கிறார் இயக்குனர் விக்ரமன். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான வில்லனாக நடித்தவர் கசன்கான். இவர் பி வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் நடிப்பில் வெளிவந்த செந்தமிழ் பாட்டு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் விஜயகாந்தின் நடிப்பில் வந்த என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண், வல்லரசு, கருப்பு நிலா, வானத்தைப்போல போன்ற பல படங்களிலும் வில்லனாக கலக்கிக் கொண்டிருந்தார். மேலும், இவர் இயக்குனர் விக்ரமன், சுந்தர்ராஜன், பி வாசு, சுந்தர் சி போன்ற பல இயக்குனர்களின்
கம்பெனிகளில் ஆர்டிஸ்ட் ஆகவே இருந்து இருக்கிறார்.

- Advertisement -

கசன்கான் இறப்பு:

மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் வில்லனாக மிரட்டி இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறை தொடங்கியுடன் இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக நடிகர் கசன்கான் உயிரிழந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் விக்ரமன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் கசன்கான் இறப்பு குறித்து இயக்குனர் விக்ரமன் கூறியிருப்பது, இன்று தான் எனக்கு தகவல் தெரிந்தது. 90 கால கட்டங்களில் எல்லா படங்களிலும் அவரைப் பார்க்கலாம். அவர் நடித்த பல படங்கள் நூறு நாள் தாண்டிருக்கிறது. என்னிடம் எப்பவும் ரொம்ப மரியாதை ஆக இருப்பார், மென்மையாகப் பேசுவார். வானத்தைப்போல படத்திற்கு முன்னாடியே அவர் விஜயகாந்த் சார் படங்களில் நிறைய நடித்திருக்கிறார். ஸ்பாட்டில் கேப்டன் கேப்டன் என்று தான் விஜயகாந்த் சார் கிட்ட அவர் பணிவாக நடந்து கொள்வார்.

-விளம்பரம்-

கசன்கான் குறித்து சொன்னது:

சினிமாவில் தான் அவர் வில்லனாக இருக்கிறார். ஆனால், ரியல் வாழ்க்கையில் அவர் ஜெம் பர்சன் ஆக வாழ்ந்து விட்டுப் போய் இருக்கிறார். அவர் இறந்து விட்டார் என்று நானும் செய்திகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நல்ல மனிதனை இந்த திரையுலகம் இழந்து விட்டது. சமீபத்தில் தான் சரத்பாபு சார் இறந்து விட்டார். அவருடைய வேதனையில் இருந்து மீண்டு வருவதற்குள் கசன்கான் மறைவு எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement