கேலிக்கு உள்ளான பொன்னியின் செல்வனின் பர்ஸ்ட் லுக், அதை தூக்கி சாப்பிடும் அளவு வெளியான புதிய போஸ்டர்.

0
456
ponniyinselvan
- Advertisement -

சோழா டீ விளம்பரத்திலிருந்து சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் என ரசிகர்கள் விக்ரமின் புகைப்படத்தை கொண்டாடி வரும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

வெளியான ஆதித்த கரிகாலன் புகைப்படம்:

மேலும், கூடிய விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் சோழன் வருகிறான் என கேப்சனிட்டு பின்னணி இசையோடு பொன்னியின் செல்வன் தொடர்பாக வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆதித்த கரிகாலனாக படத்தில் விக்ரம் நடித்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

விக்ரமின் புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:

அதே சமயம் விக்ரமின் இன்னொரு புகைப்படமும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதாவது, விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நாட்களில் டப்பிங் கொடுப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என இருந்தார். அப்படி அவர் சோழா டீ என்ற விளம்பரத்தில் நடித்தார். அதில் ராஜா கெட்டப்பில் விக்ரம் இருந்தார். தற்போது ஆதித்ய கரிகாலன் கெட்டப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் விக்ரம் புகைப்படத்தையும், சோழா டீ விளம்பரத்தில் அவர் மன்னன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement