திருமணத்திற்கு பின் ஆளே மாறிய வில் அம்பு பட நடிகை – இதோ அவரின் கணவர் மற்றும் மகளின் புகைப்படம்.

0
1019
vilambu
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு அந்த நடிகைகள் என்ன ஆனார்கள்? என்றே தெரியாமல் போய்விடுகிறது. சில நடிகைகள் மட்டும் தான் பல ஆண்டுகாலமாக நடித்து வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் இருப்பது சாதனைக்குரிய ஒன்று. அதில் நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற சில நடிகைகள் மட்டும் தான் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகைகள் ஒரு சில படங்களில் தலையை காட்டி விட்டு பிறகு என்ன ஆனார்கள்? என்று தெரியாமலேயே போய்விடுகிறது. அந்த வரிசையில் இருப்பவர் தான் சம்ஸ்க்ருதி ஷெனாய். இவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

இவர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவர் பாரம்பரிய நடன கலைஞரும் ஆவார். இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் நிறைய விளம்பரப் படங்களில் நடித்திருந்தார். இவர் முதலில் 2013ம் ஆண்டு வெளிவந்த மை பேன் ராமு என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு சில படங்களில் நடித்து இருந்தார். பின் இவர் காடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

சம்ஸ்க்ருத்தி ஷெனாய் திரைப்பயணம்:

இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது வில் அம்பு படம் தான். இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வில் அம்பு. இந்த படம் அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தது. இப்படத்தில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சம்ஸ்க்ருத்தி ஷெனாய், சாந்தினி தமிழரசன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஒரு நபரின் இழப்பு மற்றொருவரின் ஆதாயம் எவ்வாறு அவருடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பது தான் படத்தின் கதை.

சம்ஸ்க்ருத்தி ஷெனாய் நடித்த படங்கள்:

இந்த படம் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் பாடலின் மூலம்ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் சம்ஸ்க்ருத்தி ஷெனாய். பின் இவர் தமிழில் சேதுபூமி, தண்ணி வண்டி போன்ற சில படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

சம்ஸ்க்ருத்தி ஷெனாய் திருமணம் குறித்த தகவல்:

இந்நிலையில் நடிகை சம்ஸ்க்ருத்தி ஷெனாய் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகை சமஸ்கிருதி அவர்கள் கேரள தொழில் அதிபர் விஷ்ணு எஸ் நாயர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவருக்கு தற்போது 7 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு சம்ஸ்க்ருத்தி ஷெனாய் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.

சம்ஸ்க்ருத்தி ஷெனாய் திருமண புகைப்படங்கள்:

ஆனால், நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதோடு தன் கணவருடன் இணைந்து சம்ஸ்க்ருத்தி ஷெனாய் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம். தற்போது இவர்களின் குடும்ப புகைபடங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதில் சம்ஸ்க்ருத்தி ஷெனாய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் உள்ளார். பலரும் இவர் தான் வில் அம்பு பட நடிகையா? என்று கேட்டு வருகிறார்கள்.

Advertisement