தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அதுவும் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ் ஆகும். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார்கள்.
விலங்கு படம் பற்றிய தகவல்:
அதில் நடிகர் விமல், நடிகை இனியா, இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ், தயாரிப்பாளர் மதன் மற்றும் ஜி5 குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய விமல் விலங்கு மூலம் தான் re-entry ஆவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திரைப்பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தது, தனக்கு பல அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், இந்த படம் உண்மை சம்பவ பின்னணியில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் விலங்கு படத்தில் கிச்சா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்புக்காக செய்த வேலைகள்:
அதில் அவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் 1987ல் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தேன். வாய்ப்புகள் கிடைக்க பல இடத்தில் வேலை செய்து கஷ்டப்பட்டேன். இருந்தாலும் எனக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பிறகு ஆட்டோ எடுத்து ஓட்டினால் அடிக்கடி சினிமா கம்பெனியில் ஏறி இறங்கலாம். அதன் மூலம் வாய்ப்பு கிடைக்குமோ? என்று டிரைவிங் ஸ்கூல் போய் லைசென்ஸ் எடுத்து ஆட்டோ ஓட ஆரம்பித்தேன். இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தான் எனக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். பிறகு திருமணம் திருமணம் ஆகி குடும்பம் என்று அப்படியே என்னுடைய வாழ்க்கை போனது.
சினிமாவில் நுழைய பட்ட கஷ்டங்கள்:
அதற்கு பிறகு தான் பிரசாந்த் இந்த மாதிரி படம் பண்ணப் போறேன் மாமா பண்ணலாமா? என்று கேட்டார். வாய்ப்புக்காக காத்திருந்த நானும் சரி என்று சொல்லிவிட்டேன். பிரசாந்த் வேற யாரும் இல்லைங்க என் மனைவி தம்பி. அவர் இதற்கு முன்னாடி புரூஸ்லி எடுக்கும்போது என்னை கூட்டிட்டு போனார். ஆனால், எனக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை. சும்மா நின்றுவிட்டு வருகிற காட்சி மட்டும் தான் கொடுத்தார். அது எனக்கு ரொம்ப மன கஷ்டமாக இருந்தது. இப்ப எனக்கு விலங்கு படத்தில் முக்கியமான ரோல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆரம்பத்தில் என்னுடைய மச்சான் என்னை வைத்து படம் பண்ண யோசித்தார்.
பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி:
அதற்காக அவர் எனக்கு பல தேர்வுகள் வைத்தார். பிறகு உடம்பைக் குறைக்க சொல்லி ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். நிறைய வேலைகள் கொடுத்தார். அதற்கு பிறகுதான் பிரசாந்த் என்னிடம் நீங்கள் எல்லாம் படத்திற்கு ஒத்து போக்குவீர்களா? என்று சோதித்தேன் என்று சொன்னார். நானும் சினிமாவில் இருந்தால் இதெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? என்றெல்லாம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். அதோடு ஒரு முறை நான் சுகமான சுமைகள் என்ற படத்தின் போது நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தேன். வாய்ப்பு கேட்ட போது, நீ டிரைவர் தானே வெளியே போ என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகு தான் எனக்கு இந்த படம் அமைந்தது. படத்தைப் பார்த்துட்டு பலபேரும் பாராட்டி இருந்தார்கள். பல வருட உழைப்புக்கு கிடைத்த பலனாகத்தான் நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.