7000 ரூபாய் மொபைலில் வீடியோ எடுத்தும், இப்போது ஆடி கார் வாங்கி இருக்கும் – Village Food Safari டீம் மற்றும் குட்டி புலி அளித்த பேட்டி.

0
174
kuttypuli
- Advertisement -

யூடியுபில் எத்தனையோ வகையிலான சேனல்கள் இருந்தாலும் குக்கிங் சேனல்களுக்கு என்று தனி பிரியர்கள் உண்டு. அதிலும் நாம் இப்போது காண இருப்பவர்களுக்கு தனியாகவே ரசிகர் பட்டாளங்கள் உண்டு VILLAGE COOKING SAFARI சேனல் குழுவினருடன் ஒரு தனியார் யூடியூப் நிறுவனம் பேட்டி ஒன்றை எடுத்தது அதில் அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது ஆடி கார் வாங்கியது முதல் அவர் அவர்களது சந்தோஷம் மற்றும் துக்க நிகழ்வுகளை நம்மிடையே மனம் திறந்து பேசினார்கள். சேனலில் இவர்கள் போடும் வீடியோக்கள் ஒரு சமையல் டீஸ்சை எப்படி செய்ய வேண்டும் என்று செய்து காட்டி அதை சாப்பிட்டும் காட்டுவார்கள் இதுதான் இவர்களது வீடியோ செய்யும் முறை.

-விளம்பரம்-

நன்றாக சாப்பிடுவேன் என்பதனால் என்னை செலக்ட் செய்தார்கள் :-

மேலும் வீடியோவில் வரும் சிவசுப்பிரமணியம் கூறுகையில் நாங்கள் மயிலாடுதுறையில் சீர்காழியில் உள்ள கிராமத்தில் வசிக்கிறோம். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எனது தாய் மாமாக்கள் இருவரும் ஒரு யூடியுப் சேனல்
ஆரம்பிக்கலாம் அதிலிருந்து வருமானம் வரும் என்று கூறி என்னை வைத்து சேனல் ஒன்றை ஆரம்பித்தார்கள். நான் ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்தால் நன்றாக சாப்பிடுகின்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இவர்களை செலக்ட் செய்தார்கள். என்னை கூட்டிக்கொண்டு இவர்கள் வாங்கிக் கொடுத்த முதல் உணவு சூப்பு தான் சூப்பும் சிக்கன்சிக்கன் 65 வாங்கி கொடுத்தார்கள். இப்படியாகத்தான் எங்கள் சேனல் தொடங்கப்பட்டு அதில் நாங்கள் பயணிக்கிறோம்.

- Advertisement -

நாங்கள் வீடியோ எடுப்பதற்கு பயன்படுத்திய மொபைல் :-

நாங்கள் சேனல் தொடங்கிய பொழுது வீடியோ எடுப்பதற்காக உபயோகப்படுத்திய மொபைல் சாம்சங் J2. இந்த மொபைலில் தன் வீடியோ எடுப்போம் இந்த மொபைலில் கேமரா இருக்கும் பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்து இருக்கும் இந்நிலையில் நாங்கள் வீடியோ எடுக்கும் போது தூசி துகள்கள் எல்லாம் அந்த கேமராவில் படிந்து விடும் அதன் பிறகு காது குடையும் பஞ்சை வைத்து அதை சுத்தம் செய்து வீடியோ எடுப்போம். மொபைலில் ஜார்ஜ் இருக்காது வேகமாக குறைந்து விடும் அதனால் எக்ஸ்டெண்டெட் போர்டு வைத்து ஜார்ஜ் போட்டு கொண்டே வீடியோக்கள் ஷூட் செய்வோம் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்து தான் நாங்கள் இந்த அளவு வளர்ந்து வந்துள்ளோம் என கூறினார்கள்.

பிளே ஸ்டேஷன் நடத்திய வருமானத்தில் சேனலை நடத்தினோம் :-

ஆரம்ப காலகட்டங்களில் வீடியோ எடுப்பதற்கு மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படும். அந்த பணத்திற்காக நாங்கள் வீட்டில் வைத்திருந்த ப்ளே ஸ்டேஷன் 2 மற்றும் கலைஞர் டிவியுடன் எங்கள் கொட்டகையில் வைத்து ரெடி பண்ணி ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் என்ற கணக்கில் பசங்களை விளையாட விடுவோம். ப்ளே ஸ்டேசன் விளையாடுவதற்கு எங்கள் கிராமத்தில் இருந்து சீர்காழி வரை செல்ல வேண்டி இருந்ததால். நாங்கள் ஆரம்பித்தவுடன் எங்களது கிராமத்து பயன்கள் அனைவரும் எங்களிடம் வந்து விளையாடுவார்கள் அதனால் ஒரு நாளைக்கு 250 ரூபாய் முதல் வருமானம் ஈட்டுவோம் அதில் கரண்ட் பில் வீடியோ எடுப்பதற்கு பொருட்கள் வாங்குவதற்கு என காசை பிரித்து வைத்து தான் சேனலை நடத்தினோம்.

-விளம்பரம்-

துபாயில் இருந்து எங்கள் வீடியோ பார்ப்பார்கள் :-

முதலில் எனக்கு போடுவதற்கு சரியான ஆடையும் இருக்காது இரண்டு சட்டை இரண்டு டிராயர் இரண்டு கைலிகள் மட்டும் தான் இருக்கும். நான் வீடியோவில் இதே உடைகளை மாறி மாறி போடுவதால் பலர் என்னிடம் கேட்பார்கள். இதற்கு ஒரே துணியை அணிகிறீர்கள் என்றார்கள். அதை என் மாமாவிடம் கூறிய போது இது உன் அடையாளமாக மாறிவிட்டது இதை தொடர்ந்து அணிந்து கொள் என்று என்னிடம் கூறினார். எங்கள் கிராமத்தில் தெரிந்தவர்கள் அனைவரும் என்னை சந்திக்கும் போது கூறுகையில் துபாயில் இருந்தெல்லாம் உன் வீடியோ பார்ப்போமடா இது எங்கள் கிராமத்து பையன் என்று பெருமையாக கூறிக் கொள்வோம் என்றெல்லாம் என்னிடம் கூறுவார்கள். என் மாமாவிற்கும் போன் பண்ணி நாங்கள் உங்கள் சேனலை தொடர்ந்து பார்க்கின்றோம் நீங்கள் நன்றாக பண்ணுகிறீர்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். எனக்கே எங்கள் கிராமத்து பயன்கள் எல்லாம் நாங்கள் செய்யும் உணவுகளை அவர்களை செய்து பார்த்து வீடியோ எல்லாம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைப்பார்கள்.

எப்படி குட்டிபூலி எங்களுடன் இனைந்தார் :-

குட்டிப்புலி அண்ணன் எங்களுடன் எப்படி இணைந்தார் என்றால் உங்கள் மீனவன் அவரின் கடை திறப்பு விழாவிற்காக நாங்கள் சென்றபோது குட்டி புலி அண்ணன் வருகிறார்கள் என்று சொன்னார்கள். நாங்களும் குட்டிப்புலி என்றவுடன் யாரோ கெத்தனா ஆள் வருகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் அண்ணன் வந்தவுடன் தான் தெரிந்தது ஏன் குட்டி புலி என்று அழைக்கிறார்கள் என்று. அண்ணனின் நிலை பற்றி கேள்விப்பட்டோம் அண்ணனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எனது மாமா கூறினார். அதனால் அண்ணனை வைத்து கொய்யாப்பழம் திருடுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றை எடுத்தும் அந்த வீடியோவும் யூடியுபில் டிரன்டிங்காக வந்தது. இப்போது அண்ணனும் எங்களுடன் இணைந்து விட்டார் நாங்களும் அண்ணனுடன் இணைந்து பயணிக்கின்றோம் என கூறினார்.

ஆடி கார் வாங்குவது எங்கள் கனவு :-

நாங்கள் இந்த ஆடி கார் வாங்குவதற்கு முன்பாக ஒரு கார் ஒன்று வாங்கிருந்தோம். அந்த காரை பார்த்த என் சொந்தக்காரர் ஒருவர் இது என்னடா சோப்பு டப்பா காரை வாங்கி வைத்துள்ளார்கள் என்று கேலியாக பேசினார். அதை அந்த நபர் என்னிடம் வந்து என்னடா உன் சொந்தக்காரர் இப்படி பேசுகிறார் என்று தெரிவித்தார் இருந்தபோதும் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுவயதில் இருந்து ஆடி கார் வாங்க வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்தது அதற்கான வாய்ப்பு எங்களுக்கு வந்தவுடன் நாங்கள் ஆடி காரை வாங்கிக் கொண்டு ஊருக்குள் கிராமத்தில் சென்று எங்கள் வீட்டு வெளியே நிப்பாட்டி விட்டோம். பயங்கர மாஸாக இருந்து அனைவரும் வந்து அவரை பார்த்துவிட்டு சென்றார்கள். என்னடா இது சோப்பு டப்பா கார வாங்கி உள்ளான் என்று சொன்ன சொந்தக்காரரே நாங்கள் இல்லாத சமயத்தில் வந்து எங்கள் காரை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். இதெல்லாம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என சிவசுப்பிரமணியம் மற்றும் அவரது இரு மாமாவும், குட்டி புலி அவர்களும் நம்மிடையே வெளிப்படையாக பேசினார்கள்.

Advertisement