முகத்தில் ரத்தம் வடிய வடிய போலீசில் புகார் கொடுத்த மன்சூர் அலிகான் 3-வது மனைவி..!

0
237
Mansor-alikhan

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மனைவி கொடூரமாக தாக்கப்பட்டு காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட புகார் அளிக்க சென்ற சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mansoorialikhan

வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து பிரபலமடைந்தவராவார். சமீப காலமாக சர்ச்சையான விடயங்களில் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அடிக்கடி சிறை வாசம் சென்று வந்த வண்ணம் இருக்கிறார்,.

மன்சூர் அலிகானிற்கு 3 மனைவிகளும் உள்ளனர். நேற்றிரவு மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த போதே அவரது 2 வது மனைவியின் மகள் லைலா, மகன் மீரான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர்.இதில் அவரது முகத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதனை மன்சூர் அலிகான் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார்.

mansoor ali khan

vahitha

இந்த சம்பவத்தை தொடர்ந்து வஹிதா, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னை வீட்டு சிறையில் வைத்து உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமைபடுத்தி உள்ளதாக ரத்தம் வடிந்த நிலையில் அவரது மனைவி புகார் கொடுத்து உள்ளார். தற்போது வஹிதா கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.