‘ஒரு லட்ச ரூபா கொடுத்தாதான் வருவீங்கன்னு சொன்னீங்களா’ – பயில்வான் vs விமலின் காரசார விவாதம்.

0
892
Vimal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தொடர்ந்து நடிகைகள் குறித்து அவதூராக பேசிவரும் இவரை நடிகை ராதிகா சரத்குமார் நடுரோட்டில் திட்டி தீர்த்தார். அதே போல இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இவரை நடு ரோட்டில் வம்பிழுத்து செருப்பால் அடிப்பேன் என்று அடிக்கவே சென்று விட்டார். என்ன தான் இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதை மட்டும் பயில்வான் ரங்கநாதன் நிறுத்தியபாடில்லை.

- Advertisement -

விமலின் குலசாமி :

இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற விமலை பயில்வான் ரங்கநாதன் ஏடாகுடமாக கேள்வி கேட்டு இருக்கிறார். நடிகர் விமல் தற்போது  ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால், இதில் விமல் கலந்துகொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் அமீர் ‘தற்போது பொன்னியின் செல்வன்-2 படத்தையே புரமோசன் மூலம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது.இவ்வளவு பெரிய படத்திற்கே புரமோஷன் தேவைப்படுகிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்து அந்த படத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். இன்று சினிமாவின் நிலை இதுதான். எது சரி, தவறு என சொல்ல முடியாது.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் கேள்வி :

அப்படி ‘குலசாமி’ படத்தின் நாயகன், நாயகி இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இல்லை. நடிகர்களுக்கு பொறுப்பு வேண்டும்’ என்று விமலைமர்சித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற விமலுடன் இந்த விவகாரம் குறித்து கேட்ட பயில்வான் ரங்கநாதன் ‘நீங்கள் லட்ச ரூபாய் பணம் கேட்டு அதனை தராததால் தான் ப்ரொமோஷனுக்கு வரவில்லையா, என்று கேள்வி எழுப்பினார்.

விமலின் பதில் :

எதற்கு பதில் அளித்த விமல் மிகவும் தவறான தகவல் அப்படி கேட்டிருந்தால் லட்சம் இல்லை அதைவிட அதிகமாகவே கேட்டு இருப்பேன். அந்த பிரஸ் மீட் தேதியை ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னாடி தான் எனக்கே சொன்னார்கள். நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை அதேபோல இது இவ்வளவு தூரம் பெரிதாகும் என்றும் நான் நினைக்கவில்லை. நான் தெய்வமச்சான் படத்தின் ப்ரோமோசனை முடித்து இங்கே வருவதற்குள் இங்கே நிகழ்ச்சி முடிந்து விட்டது. இது வேற படம் அது வேற படம், உங்களுக்கு படமே தெரியல ‘ என்று கூறி இருக்கிறார் விமல்.

Advertisement