வீட்ல சும்மா இருந்த நான் ஹீரோ, ஃபிளாப் கொடுத்தவன் இயக்குநர் – வேடிக்கையாக வலியை சொன்ன விமல். நெகிழ்ந்த ரசிகர்கள்.

0
804
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். சிறுவயதிலேயே விமல் தன்னுடைய படிப்பை நிறுத்தி கூத்துப்பட்டறை என்னும் நாடகக் குழுவில் சேர்ந்து தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். மேலும், இவர் சினிமா உலகில் ஹீரோ ஆவதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

விமலின் திரைப்பயணம்:

இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. மேலும், களவாணி படம் போல் ஒரு வெற்றி படத்திற்காக விமல் போராடிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் விலங்கு. இது வெப் சீரிஸ் ஆகும். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

விமல் நடித்த விலங்கு படம்:

இந்த படம் பிப்ரவரி 18ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார்கள். அதில் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமல் பேசியது, பல வருடம் கழித்து மைக் முன்னாடி நிற்கிறேன். முதலில் இது படமாக தான் உருவாகி இருந்தது. ஆனால், படத்தின் கன்டென்ட் அதிகமாக அதிகமாக படத்தின் கதையை 2.30 மணி நேரத்திற்குள் சொல்ல முடியவில்லை. அதனால் தான் வெப்சீரிஸ் பண்ணோம்.

-விளம்பரம்-

விமல் அளித்த பேட்டி:

உண்மையில் விலங்கு படம் நன்றாக இருக்கு. நானும் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிவிட்டது. ஒரு வெப்சீரிஸ் பண்ணனும் என்றும், அதன் அனுபவம் எப்படி இருக்கு என்று பார்க்கனும் என்று ஆசை. தற்போது அதுவும் ரொம்ப நல்லா வந்திருக்கு. காதல் சட்டையிலிருந்து காக்கி சட்டைக்கும் மாறிய புது விமலை நீங்கள் விலங்கு வெப்சிரிஸ் மூலம் பார்க்கலாம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை பார்த்தீர்களென்றால், எனக்கு மூணு வருஷமாக படம் இல்லை. வீட்டில் தான் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் படத்தின் கதாநாயகன். அதேபோல் மதன் ஜேம்ஸ் கொடிகட்டி பறந்தவர்.

படக்குழுவினரை கலாய்த்த விமல்:

அவரும் மூணு வருஷம் ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் இந்த படத்தின் ப்ரொடியூசர். பின் ஒரு படத்தை எடுத்து பிளாப் கொடுத்த பிரசாந்த் தான் இந்த படத்தின் இயக்குனர். எப்படி இந்த படத்தை கேட்கவே சும்மா அதிருதில்ல. இந்த மூன்று பேரையும் நம்பி ஜி5 இந்த வேலையை கொடுத்ததற்கு பாராட்ட வேண்டும். ஆனால், எங்கள் மூவரையும் தோல்வியுற்றவர்களுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த மூன்று நபர்களாக தான் நான் பார்க்கிறேன். தோல்விகளில் மட்டுமே அனுபவத்தை பெற முடியும் என்று கூறினார். இப்படி விமல் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்து நெகிழந்த ரசிகர்கள் ‘ஸ்லீப்பிங் ஸ்டாருக்கு இவரு எவ்ளோவோ பரவயில்ல’ என்று கூறி வருகின்றனர்.

Advertisement