தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் விமல். தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடம். இந்த படத்தில் நடராஜ், ஆடுகளம் நரேன், சனஷ்கா, பால சரவணன், முனீஸ் காந்த் உட்பட நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கேந்திரன் வி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கின்ற வடம் படம் ரசிகர்கள் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தின் ஆரம்பத்திலேயே நடராஜ் வீட்டில் இரண்டு காளை கன்னு பிறக்கிறது. அதை நட்டி மஞ்சுவிரட்டுக்கு தயார் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால் இரண்டுமே அதற்கு ஏற்றதில்லை என்று தெரிகிறது. பின் அதில் ஒன்றை தன் மச்சினிச்சிக்கும், இன்னொரு அடிமாட்டுக்கும் விற்று விடுகிறார். அந்த நேரத்தில் எப்போதும்
ஊருக்கும் மாடுகளுக்கும் கூட நல்லது நினைக்கும் நரேன் அந்த கன்றை காப்பாற்றி தன்னுடைய வீட்டில் வளர்க்கிறார்.
அந்த மாட்டை மஞ்சு விரட்டுக்கு நரேனுடைய மகனான விமல் தயார் செய்கிறார். பின் அந்த மாட்டை வைத்து பல வெற்றிகளையும் விமல் பெறுகிறார். அதே நேரத்தில் திருவிழாவில் தன்னுடைய தந்தையிடம் தகார் செய்த ஊர் பெரியவர் ஒருவரின் வேட்டியை விமல் அவிழ்த்து அவமானப்படுத்தி இருக்கிறார். இதனால் விமலை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் நரேன் குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் ஒருவர் விமலை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்.

பின் விமல் ஒருநாள் தன் காதலியை சந்திக்கும் போது தன்னை கொல்ல வரும் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். இதற்கிடையில் விமலுக்கு ஒரு துரோகம் நடக்கிறது. ஏன் இந்த துரோகம் நடந்தது? எதிரிகளிடமிருந்து விமல் தப்பித்தாரா? அந்த துரோகத்திற்கு காரணம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ விமல் சிறப்பாக நடித்திருக்கிறார். கிராமத்து கதை அம்சத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக விமல் கொடுத்து இருக்கிறார்.
முறுக்கு மீசை கையை முறுக்கி, வேட்டியை மடித்து அவர் களத்தில் இறங்கும் காட்சிகளும் நன்றாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாமல் விமல் நடித்து இருக்கிறார். இவருக்கு கூடுதல் பலமே படத்தில் நரேன், பாலச்சரவணன், நட்டி உடைய நடிப்பு. மஞ்சுவிரட்டை வைத்து தான் இந்த படம் நகர்கிறது. மாடுகள் அதை சுற்றி நடக்கும் சந்தோஷம், வன்மம், பழிவாங்கல் கதை என்று இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தின் ஆரம்பம் பொறுமையாக சென்றாலும் இறுதி காட்சி நன்றாக இருக்கிறது. ஆங்காங்கே சில காட்சிகள் சலிப்படைய வைத்தாலும் இயக்குனர் அதை விறுவிறுப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

மாடு பிடிக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் விமல், நட்டிக்கிடையில் நடக்கும் பகை. பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
விமல்-நட்டி நடிப்பு நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்க்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் ஓகே
கிராமத்து மஞ்சுவிரட்டை கண்முன்னே காட்டியது
குறை:
சில காட்சிகளை விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாகவும் சுறுசுறுப்பாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
பாடல்கள் பெரிதாக கவலை
மொத்தத்தில் வடம் - மஞ்சுவிரட்டு ஆட்டம்






