பிரேம்ஜியுடன் திருமணமா ? வைரலான புகைப்படத்திற்கு பாடகி வினைதா கொடுத்த விளக்கம்.

0
742
premji
- Advertisement -

பிரேம்ஜிகும் தனக்கும் இருக்கும் உறவு குறித்து பாடகி வினைதா பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், ‘என்ன கொடுமை சார்’? என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is premnji-655x1024.jpg

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் பிரேம்ஜி மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

முரட்டு சிங்கிள் பிரேம்ஜி :

இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போதும்? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும்.சமீப காலமாகவே பிரேம்ஜி – வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் வினைத்தா இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டுஇருந்தார்.

This image has an empty alt attribute; its file name is nvmb-1-856x1024.jpg

பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் : ;

அது என்னவென்றால், வினைத்தா, பிரேம்ஜி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கூறி இருந்தது, ‘உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்’ என்று கூறி இருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பிரேம்ஜிக்கும் இவருக்கும் காதல் என்றும் விரைவில் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

பிரேம்ஜிக்கு திருமணமா ?

தற்போது பிரேம்ஜிக்கு 42 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு காலமாக திருமணம் எப்போ? எப்போ? என்று கேட்ட ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருந்தனர். அதோடு பிரேம்ஜி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்டுவந்தனர். பிரேம்ஜி – வினைத்தா பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிந்த நிலையில் இந்த கிசுகிசு குறித்து பேசியுள்ள பாடகி வினைதா இதெல்லாம் வதந்தி பாஸ் என்பது போல அதிர்ச்சியான விளக்கமளித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is vnbnb-1024x1024.jpg

வினைதா விளக்கம் :

அதில் ‘ இது நிச்சயமா வதந்திதான். பிரேம் எனக்கு நீண்டகால, நல்ல ஃபிரெண்ட். நான் எப்போ எங்க ரெண்டு பேர் போட்டோஸ் போட்டாலும் கூடவே ஏதாவது பாட்டு போடறது வழக்கம். அவர்கூட இருக்குற மாதிரி எத்தனையோ பேர் போட்டோஸ் போடறாங்க. நான் மட்டும் போடலையே, யாரோ நாங்க சேர்ந்து எடுத்துக்கிட்ட இந்தப் படத்தைப் பரவவிட்டு, வதந்தியைக் கிளப்பி விட்ருக்காங்க. நிச்சயமா எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை. பிரேம்ஜியை கல்யாணம் பண்ற ஐடியாவும் சுத்தமா இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement