அலெக்ஸ்பாண்டியனில் சந்தானத்தின் தங்கை.! இன்ஸ்டகிராமில் ஜொள்ளு விட வைக்கும் போஸ்.!

0
1076
Akansha-Puri

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்காவும் மேலும், மூன்று பெண்களும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக மூன்று பெண்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான அகன்ஷா பூரி.

மத்யபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தார் அதன் பின்னர் தமிழில் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பின்னர் தமிழில் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், மலையாளம், கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பிவிட்டார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘விநாயகர்’ என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து வருகிறார்.