இயக்குனர் ஜூன் மோசஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பேய் கதை. இந்தப் படத்தை ஜெர்ரி'ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்ய லக்ஷ்மி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார், போபோ சசி இசையமைத்திருக்கிறார். திரில்லர் பாணியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஆறு பேர் சேர்ந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அப்போது அவர்கள் எல்லோருமே சேர்ந்து எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்குப் பின் என்ன நடந்தது? அங்கு நடக்கும் அமானுஷ்யர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? கடைசியில் எல்லோருமே தப்பித்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தை ஒரு வித்தியாசமான திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
படம் முழுக்க முழுக்க புது நடிகர்கள் தான். இருந்தாலுமே கதைக்களத்தை இயக்குனர் நன்றாக கொடுத்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசை தான். படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை படத்தினுடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாமே இயக்குனர் கவனமாக கையாண்டு இருக்கிறார். படம் திர்ல்லராக மட்டுமில்லாமல் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

குழந்தைகள் குடும்பத்துடன் கொண்டாட படமாக இருக்கிறது. படத்தில் எந்த ஒரு முகம் சுளிக்கும் காட்சிகளோ, வன்முறையான காட்சிகளோ எதுவுமே கிடையாது. முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி சூப்பராக இருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கும் ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று ரசிக்கும் படமாக தான் இருக்கிறது. நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் கொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
இயக்கம்
கதைக்களம்
நகைச்சுவை
பின்னணி இசை படத்திற்க்கு பக்கபலம்
https://youtu.be/CXLx1FgA6hY?si=TP5Z4UyayyJsMm0S
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
எல்லோரும் புதுமுகம்
மொத்தத்தில் பேய் கதை - வித்தியாசமான கண்ணோட்டம்






