இந்திய ரூபாய் மதிப்பு – நிர்மலா சீதாராமன் கருத்தை சுசகாக விமர்சித்து Reels வெளியிட்ட சூரரை போற்று பட நடிகை.

0
782
Vinodhini
- Advertisement -

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து நடிகை வினோதினி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் வினோதினி வைத்தியநாதன். இவர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பு இவர் காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது எங்கேயும் எப்போதும் படம் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தை தொடர்ந்து இவர் கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, வன்மம், நண்பேண்டா, அரண்மனை 2, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நடிகை அனன்யாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சரவணா சக்தி இயக்கத்தில் குலசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து நடிகை வினோதினி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

- Advertisement -

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:

அதாவது, சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு இருந்தார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்திருந்தார். அதில் அவரிடம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு நிர்மலா சீதாராமன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை. டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்.

இந்திய ரூபாய் குறித்து சொன்னது:

அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பண மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நடிகை வினோதினி அவர்களும் தன்னுடைய சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை வினோதினி வெளியிட்ட வீடியோ:

அதில் அவர், குறைகளை தைரியமாக சொல்லுங்கள். குறை சொன்னால் உள்ளே தூக்கி போட நாங்க என்ன ஜனநாயக நாடா! நாங்க ஒரு உணவகம். நீங்கள் எங்களின் குறைகளை சுட்டி காட்டினால் தான் எங்கள் குறைகளை நாங்கள் திருத்திக் கொள்ள முடியும். என்ன குறை சொல்லுங்கள். என்னது வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியாக இருந்ததா? வெங்காயம் கம்மியாக இல்லை, தோசை பெருசாக இருந்தது. நல்லா யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்ன குறை? சாம்பாரில் கேரட் தேட வேண்டி இருந்ததா? ஆனால், கேரட்டில் சாம்பாரை தேட வேண்டியது இல்லை. எல்லாத்தையும் பாசிட்டிவாக பாருங்கள்.

நிர்மலா கருத்துக்கு விமர்சித்த வினோதினி:

அதுதான் எல்லாமே. வேறு என்ன குறை? தேங்காய் சட்டினியில் தேங்காய் ஊசி போயிருந்ததா? தேங்காய் அப்படியே தான் இருந்தது. நாட்கள் தான் கடந்து விட்டது. அதுக்கு தேங்காய் என்ன பண்ண முடியும்? நீங்கள் எல்லாத்தையும் நெகட்டிவாக பேசுகிறீர்கள். ஒரு படத்தில் சொல்லுவாங்க, ஒரு சின்ன வரி பக்கத்தில் ஒரு பெரிய வரியை போட்டு பாருங்கள். அப்புறம் அந்த சின்ன வரியை பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீங்க என்று இவர் ஒரு உணவகத்தின் முதலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் போல பேசி இருக்கிறார்.

Advertisement