‘தனுசுக்கு நீ முன்ன பண்ணதே போதும்’ – தன் அடுத்த அப்டேட் குறித்து ட்வீட் போட்ட தனுஷ் பட இசையமைப்பாளரை கலாய்த்த தனுஷ் ரசிகர்கள்.

0
1103
dhanush
- Advertisement -

தன்னை கேலி செய்த தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் துல்கர் சல்மான் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அதன் பின்னர் இவர் தமிழில் சதுரங்க வேட்டை முண்டாசுப்பட்டி ஜோக்கர் பாண்டி மெஹந்தி சர்க்கஸ் தாராள பிரபு போன்ற பல்வேறு படங்களில் இசையமைத்திருந்தார். இவரது இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

ஆனால், இவர் இசையமைத்த vip2 படத்தின் பாடல்கள் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தனுஷ் நடிப்பில் வெளியான Vip திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது. vip படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

இதையும் பாருங்க : ஆபாச படம் எடுத்ததால் கைதான ஷில்பா ஷெட்டியின் கணவர் – பாலிவுட்டை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். வைரலாகும் அவரின் பழைய வக்கிர பதிவுகள்.

- Advertisement -

ஆனால், முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. அதே போல இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில், என் பக்கத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய அப்டேட் வர இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் இவரின் பதிவை கேலி செய்தனர்.

அதிலும் குறிப்பாக தனுஷின் vip2 படத்தை ஒப்பிட்டு, நீ ஏற்கனவே செஞ்சதே போதும் என்று கமன்ட் செய்தனர். இதனால் கொஞ்சம் கடுப்பான ஷான் ரோல்டன், வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக இசை வேலைகளை முடிக்க மூன்று நாள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது. அதில் எப்படி சிறப்பான இசையை கொடுக்க முடியும். ஆனால், மனசாட்சி மற்றும் இதயம் இல்லாத தனுஷ் ரசிகர்கள் இதை பற்றி கேலி செய்கின்றனர்.

-விளம்பரம்-

என்னுடைய அடுத்த திட்டம் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். எனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நான் நிறைய நல்ல பாடல்களை கொடுப்பேன். உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் தனுஷுடன் இணைவேன் ரசிகர்களை கவரும் சிறந்த இசையை கொடுத்து என்னுடைய திறமையை நிரூபிப்பேன். அதற்கான சரியான நேரம் வரும் என்று கூறியுள்ளார்.

Advertisement