ஓவர் நைட்டில் பிரபலமான சிறுவன் அப்துல் கலாம் இந்த படத்தில் நடித்துள்ளார் – புகைப்படத்தை பகிர்ந்த நடிகர்.

0
692
abdulkalam
- Advertisement -

மதத்தை விட மனிதநேயம் தான் உயர்வு என்று பேசி இருந்த சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்தை வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தபட்டதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடு வழங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் சிறுவனின் பெயர் அப்துல் கலாம். சென்னை கண்ணகி நகரில் தாய் திவ்யா என்கிற தில்சத் பேகம் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தில்சத் கலப்பு திருமணம் செய்து கொண்டவர். மேலும், அப்துல் கலாமின் மாணவி என்பதால் தனது மகனுக்கு அப்துல் கலாம் என்று பெயர் வைத்துள்ளார்.கடந்த வாரமாகவே சிறுவன் ஒருவன் “யாரையும் வெறுக்க கூடாது, ஏன் வெறுக்கனும்” என்ற மனித நேயத்தின் மாண்பு குறித்து பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது.

-விளம்பரம்-

இதை பார்த்த பலரும் பூரித்துப் போய் பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த சிறுவன் பேசியிருந்த வீடியோ ஒட்டுமொத்த இணையதளத்தையும் மிரள வைத்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மனித நேயம் பற்றி பேசியிருக்கிறார். மேலும், சிறுவன் பேசிய வீடியோவால் அவனுடைய வாழ்க்கையிலும் மதம் விளையாட ஆரம்பித்தது. மதத்தை விட மனித நேயம் பெரிது என்ற சிறுவன் பேசியிருப்பதை குறித்து வீட்டை காலி செய்யச் சொல்லி உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து இருந்தார்கள். கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் சிறுவனின் குடும்பம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தது.

- Advertisement -

ஓவர் நைட்டில் பிரபலம் :

பின் வருதா புயலின் போது வீட்டை பறி கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இவர் வாடகை வீட்டிற்கு சென்றாரகள. இப்போது இந்த இக்கட்டான நிலையில் வீட்டை காலி செய்ய சொல்லி உரிமையாளர் சொன்னதால் எங்கே போவதென்று தெரியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் சிறுவனின் பெற்றோர். இதனிடையே மனிதநேயம் பற்றி சிறுவன் பேசியதை கேட்டு நேரில் சந்திக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அழைத்து இருந்திருந்தார். பின் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து பாராட்டி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

முதல்வரிடம் வீடு வேண்டி கோரிக்கை வைத்த பெற்றோர்கள்:

அப்போது முதல்வரிடம் தங்களுக்கு வீடு வேண்டும் என்று அப்துல் கலாமின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக சிறுவன் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அப்துல்கலாம் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தா மோ அன்பரசனுக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறுவன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கேகே நகர் சிவலிங்கபுரம் பகுதியில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது.

-விளம்பரம்-

அரசு வழங்கிய வீடு:

இதற்கான அரசாணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமிடம் வழங்கியிருக்கிறார். மேலும், இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் கூறியிருப்பது, மக்கள் கூட்டத்திற்கு இடையில் சிறிய கல் அளவிற்குக் கூட இல்லாத எங்களை மகன் உலகறிய செய்திருக்கிறார். நாங்கள் அவனுக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனது அனுபவத்தை வைத்து பேசி இருக்கான். காதல் திருமணம் செய்த எங்களுடைய கஷ்டத்தை நேரில் பார்த்துள்ளான்.

சிறுவன் நடித்த படம்:

அது அவன் மனதில் பதிந்து விட்டது. ஜாதி மதம் என்பது ஆண்டவன் உருவாக்கப்படவில்லை. அனைவருமே ஒன்று என்பதை அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த சிறுவன் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ஹே சினாமிகா என்ற படத்தில் சிறுவன் அப்துல் காலம் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார் என்று நடிகர் JSk gopi பதிவிட்டுள்ளார்.

Advertisement