‘என் கணவர் விஜய் மாதிரியே இருப்பார்’ – தன் கணவர் குறித்து சொன்ன அபிராமி. அட, ஆமாபா விஜய் மாதிரி தான் இருக்காரு.

0
1371
abhirami
- Advertisement -

விருமாண்டி பட நடிகை அபிராமி தன்னுடைய மகனுடன் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமர். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது.மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

அன்னலட்சுமியாக பிரபலமான ஆபிராமி :

இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

திருமண வாழ்க்கை

இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் மூன்று படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம் . ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

மேக்கப் இல்லாமல் அபிராமி வெளியிட்ட வீடியோ :

பட வாய்ப்புகள் குறைந்ததால் இடையில் சீரியல் பக்கம் சென்றார் அபிராமி.ஆனால், கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிப்பதையும் நிறுத்தினார். இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘கனாகண்மணி’ என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மகனுடன் இருக்கும் வீடியோ :

இப்படி ஒரு நிலையில் தன் மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அபிராமி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அபிராமி, எனக்கு அஜித், விக்ரம், விஜய் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதில் விஜய்யுடன் ஏன் நடிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால் என் கணவர் விஜய் போலவே இருப்பார். அதை நான் அவரிடமே பல முறை சொல்லி இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போலவே அவர் கணவர் விஜய் மாதிரி தான் இருக்கிறார்.

Advertisement