விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா..!வெளியான ஆதாரம்..!கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

0
529
Visvasamsecondlook

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தான் இனைய தளத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.

Kuttanadan marpappa

இந்த படத்தின் போஸ்டர் வெளியான நேரத்தில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் #visvasamsecondlook #visvasampongal #visvasamthiruvizha போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை வேடத்தில் தோன்றிய அஜித், செகண்ட் லுக் போஸ்டரில் பைக்கில் வருவது போல காட்சிபடுத்தபட்டுள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ஒரு பக்கத்தில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வந்தாலும். மற்றொரு பக்கத்தில் இந்த போஸ்டர் மலையாள படத்தின் காப்பி என்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Visvasamsecondlook

மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘குட்டநாதன் மர்பப்பா’ என்ற படத்தின் போஸ்ட்டரை போலவே தான் ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் சிலர் வாதாடி வருகின்றனர். அத்தோடு ‘குட்டநாதன் மர்பப்பா’ படத்தின் போஸ்ட்டரையும் ‘விஸ்வாசம் ‘ படத்தின் போஸ்டருடன் ஓட்டு வருகின்றனர்.