‘காதலி ஏமாற்றிவிட்டாரா ?’ – திருமணம் நின்ற காரணம் குறித்து முதன் முறையாக பேசிய விஷால்.

0
553
vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க மகனான செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது விஷலுடன் அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளையொட்டி விஷாலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் அனிஷா

- Advertisement -

நின்று போன திருமணம் :

ஆனால், அதன் பின்னர் எந்த ஆண்டும் விஷால் பிறந்தநாளுக்கு அனிஷா எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், விஷாலுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருந்தார் அனிஷா.இதனால் விஷால் – அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு நடிகர் விஷால் பேட்டிகொடுத்திருந்தார் அந்த பேட்டியில் திருமணம் நின்றதற்க்கான காரணத்தை கூறியிருந்தார்.

-விளம்பரம்-

திருமணம் நின்றதற்கு காரணம் :

திருமண நிச்சயதார்த்தம் நடந்த 2019ஆம் ஆண்டு என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான வருடம். நான் பல முறை என்னுடனேயே பேசிக்கொள்வேன் அதனால் பல பேர் இவன் என்ன பைத்தியமா என்றெல்லாம் நினைத்ததுன்டு. நானே தான் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம். நான் எந்த காரியம் எடுத்தாலும் அதனை கண்டிப்பாக முடித்து விடுவேன். ஆனால் அதுவே என்னுடைய ஒரு பலவீனமும் கூட. நிச்சயதார்த்தம் முறிந்த போது அதற்காக கவலை படவில்லை மாறாக என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்ற நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

ஏனென்றால் நடந்ததை நினைத்து வருந்துவதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லம். இப்படி இருந்ததினால் தான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் நடிகனாக என்னால் வாழ முடிந்தது. இந்த 18 வருடங்களில் பல முதுகில் குத்திய நபர்களை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார் விஷால். அதற்கு பின்னர் நெறியாளர் நீங்கள் ஒரு பிரபலமான நடிகர் என்பதினால் இந்த விஷியத்தை மக்கள் சரி என்று இருந்து விடுவார்கள் ஆனால் இதனால் ஒரு பெண்ணிற்கு சில பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரிந்ததா என்று நடிகர் விஷாலிடம் நெறியாளர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த விஷால் `இந்த நிச்சயதார்த்தம் நின்ற விஷயம் இரண்டு பேரின் சம்மதத்தில் தான் நடந்தது. ஒருவேளை காதலித்து ஏமாற்றியோ அல்லது அந்த பெண் ஒப்புக்கொண்டும் நான் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியிருந்தாலோ அது எனக்கு மன உறுத்தலாக இருந்திருக்கும். ஆனால் அந்த மாதிரியான விஷியங்கள் நடைபெறவில்லை, நாங்கள் இருவரும் சம்மதித்த பின்னர்தான் பிரிந்தோம் இதனால் இந்த நிகழ்வை அதனுடன் ஓப்பிட முடியாது என்று தன்னுடைய நிச்சயதார்த்தம் நின்றதற்கான காரணத்தை கூறியிருந்தார் நடிகர் விஷால்.

Advertisement