மதகஜராஜா படம் பற்றி ரிலீஸ்க்கு பின் விஷால் கொடுத்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மதகஜராஜா படம்:
அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:
தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், இன்று இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் மதகஜராஜா படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், பல வருடங்களுக்கு பிறகு மதகஜராஜா படம் வெளியாகி இருக்கிறது. இதை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

விஷால் பேட்டி:
என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கிற்கு வந்தால் ஒரு பத்து பதினைந்து நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவேன். ஆனால், இந்த படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாக பார்த்திருக்கிறேன். அவர்களுடைய கைதட்டில் விசில், சிரிப்பு எல்லாத்தையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் சுந்தர் சிக்கும் இது ரொம்ப ஸ்பெஷலான படம். சண்டக்கோழிக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் அது மதகஜராஜா படம் தான்.
https://www.youtube.com/watch?v=pVUlhpiHYvc
படம் பற்றி சொன்னது:
உழைப்பு என்பது எல்லா படத்திற்குமே கொடுப்போம். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை படத்திற்கு உழைத்ததை விட ரிலீஸுக்கு உழைத்தது தான் அதிகம். கடைசியில் இந்த படம் வெளியாகிவிட்டது. இந்த படம் இவ்வளவு நாளாக ஏன் வெளியாகவில்லை? என்று ஆதங்கம் எங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது. கடவுள் தான் இந்த தேதியில் படத்தை வெளியாக வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த படத்தை எல்லோரும் பாருங்கள், நிச்சயம் பிடிக்கும் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.






