நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு விஷாலின் மதகஜராஜா படம் வெளிவர இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா.
இதுதான் இவர்களுடைய முதல் படம். ஆனால், இவர்களுடைய கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு ஆம்பள படம் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களெல்லாம் வெளியாகியிருந்தது. இந்த இரண்டு படங்களுமே காமெடி ஜானரில் இயக்குனர் சுந்தர்.சி கொடுத்திருந்தார். இதில் ஆம்பள படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும், ஆக்சன் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை.
மதகஜராஜா படம்:
இதனாலேயே மதகஜராஜா படம் வெளியாவதற்கு கொஞ்சம் தாமதமானது. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு
உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் விஷால், மை டியர் லவ்வர் என்ற பாடலை பாடி இருந்தார்.

ரிலீஸ் தள்ளிப்போன காரணம்:
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு முன்பு தயாரித்த படங்களை விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததில் சில பிரச்சனை ஏற்பட்டதால் மதகஜராஜா படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடந்த சில ஆண்டுகள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மதகஜராஜா ரிலீசுக்கு தயாராக இருப்பதாக பேச்சுகள் வந்தது. ஆனால், அதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விஷால் பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவில், 12 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய பயணத்தில் ரொம்ப பிடித்த குடும்ப என்டர்டெயின்மென்ட் படமான மதகஜராஜா பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

மறைந்த நடிகர்கள்:
எனக்கு ரொம்ப பிடித்த சுந்தர்.சி, சந்தானம் கூட்டணியில் உருவான இந்த படம் கண்டிப்பாக சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஐந்து நடிகர்கள் தற்போது இல்லை. மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனுமோகன் ஆகிய ஐந்து நடிகர்களுமே இந்த இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






