என்னையும் தான் ரம்மி விளம்பரத்தில் நடிக்க கூப்பிட்டாங்க, ஆனா – சரத்குமாருக்கு விஷால் பதிலடி. குவியும் பாராட்டு.

0
460
- Advertisement -

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், தான் மறுத்து விட்டதாகவும் விஷால் தெரிவித்து இருக்கிறார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுசட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. இருப்பினும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

சரத்குமார் சொன்ன விளக்கம் :

இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த விளம்பரத்தில் நடித்த சரத்குமார் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டனர் ‘ என்று சுட்டிகாட்டி இருந்தார். இந்த கேள்வியால் ஆவேசமாக சரத்குமார் ‘‘ரம்மி என்பது அறிவு பூர்வமான விளையாட்டு என்றும் அதை விளையாட திறமை அவசியம்.

குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் ஆபாச படங்கள், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ரம்மி விளையாட்டுக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்றும் கூறி இருந்தது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

-விளம்பரம்-

நடிக்க மறுத்துள்ள விஷால் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷால் தனக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் எவ்வளவு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த விளையாட்டால் பல குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. என்னை பொறுத்தவரை, இந்த விளையாட்டை கண்டிப்பாக தடை செய்யவேண்டும்.

அந்த பணம் நிலைக்காது :

இரண்டு கைகளில் நேர்மையாக உழைத்து வரும் அந்த காசு மட்டும் தான் உதவும். அந்த காசை எடுத்துக்கொண்டு ஒரு வேலை சாப்பாட்டிற்க்கு குடும்பத்தில் கொடுத்தால் தான் ஆம்பளை என்று அர்த்தம். தவறான வழிகளில் வரும் பணம் நிலைக்காது. இந்த மாதிரி சூதாட்டம் விளையாடாதீர்கள். இந்த விளம்பரத்தில் நடிப்பது பணம் வருகிறது என சிலர் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம், என்னிடமும் இந்த விளம்பரத்தில் நடிக்க கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement