முதன் முறையாக இரண்டாம் பாகம் எடுக்கும் மிஸ்கின்.! எந்த ஹீரோவின் படம் தெரியுமா.!

0
533
Mysskin

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் மிஸ்கினுக்கும் ஒரு தனி இடம் உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியாது. சித்திரம்பேசுதடி தொடங்கி துப்பறிவாளன் வரை இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவில் இருந்து சற்று வித்தியாசமாகவே காணப்பட்டது.

Related image

ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்த இவர் யூத், ஜித்தன் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு மலையாள நடிகர் நரேனை வைத்து ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தை இயக்கினார் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் அஞ்சாதே நந்தலாலா ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பிசாசு போன்ற பல படங்களை இயக்கினார் மிஷ்கின் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் மிஷ்கின் அந்தப் படத்திலும் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மிஷ்கின் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஷாலின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement