சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷால் உதவி !

0
1013

நேற்று பிற்பகல் முதல் பொழிய துடங்கிய மழை விடியற்காலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. வேலையை முடித்துவிட்ட பலர் வீடு திரும்ப முடியாத நிலை, சாலை முழுவதும் மழை நீர் தேக்கம், போக்குவரத்து சிக்கலில் சிக்கிக்கொண்டு பலர் தவித்தனர்.

vishal-actorஇதனிடையே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷால் தனது உதவிகரங்களை நீட்டியுள்ளார். வடபழனியில் உள்ள தனது அலுவலகத்தில் உணவு மற்றும் தண்ணீர் தர தொடங்கியுள்ளார். தேவையானவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். வழியில் சிக்கிக்கொண்டவர்கள் அவரது அலுவலகத்தில் தாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.