இன்னும் மூன்று நாளில் நிச்சயதார்த்தம்.! அதற்குள்ளாக விஷாலுக்கு ஏற்பட்ட சோகம்.!

0
567
Vishal-wife

பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்துவருகிறார் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின.

நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார். மேலும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்க : முதலில் காதலை சொன்னது யார்.!காதல் ஸ்டோரி கூறும் விஷால்.! 

- Advertisement -

இந்நிலையில் விஷால் ஆந்திராவை சேர்ந்த நடிகையயை திருமணம் செய்துகொள்ள போவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். மேலும், அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், விஷால் தற்போது நடித்து வரும் ‘அயோக்கியா’ படத்தில் கடைசியாக மிச்சம் இருந்த ஒரு குத்து பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காலில் அடிபட்டதால் தற்போது அவருடைய கால் வீங்கி உள்ளது. இதனால் நடப்பதற்கு கூட விஷால் சிரமப்பட்டு வருகிறாராம்.

-விளம்பரம்-
Advertisement