விஷால் தொகுத்து வழங்கும் டி.வி ஷோ இதுதான்.! நிகழ்ச்சி பெயர், ஸ்பெஷல்..? அதிகாரப்பூர்வ தகவல்

0
540
Vishal

சமீபத்தில், சன் டி.வி-யில் விஷால் தொகுத்து வழங்கயிருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டிருந்தார்கள். அது வெளியானதில் இருந்து, ’இது என்ன மாதிரியான ஷோ; எப்படியிருக்கும்’ எனப் பல கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்திருக்கும். அதற்கெல்லாம் விடை, நேற்று நடந்த ’சண்டக்கோழி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிடைத்தது.

Actor-vishal

- Advertisement -

விஷாலின் நண்பர்களான ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரிக்கும் இந்த நிகழ்ச்சிமூலம், முதல்முறையாக சின்னத்திரைக்கு வருகிறார் விஷால். ‘சன் நாம் ஒருவர்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, 26 வாரங்கள் நடக்கயிருக்கிறது.

இந்த 26 வாரங்களில், ’இனி கடவுள்தான் வந்து காப்பத்தணும்’ என்கிற நிலைமையில் இருக்கும் 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிமூலம் உதவிசெய்யவிருக்கிறார். அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement