விஜயின் லியோ படத்தில் தவறவிட்ட வாய்ப்பு குறித்து விஷால் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.
#Therikkaaa – Well this word, I swear I don’t know the meaning, the owner of this word is one and only #ActionKing Arjun Sir.
— Vishal (@VishalKOfficial) August 15, 2023
I wish you, my guru, my mentor, my inspiration and the reason for making me an actor and as a family member a very very happy birthday and with loads of… pic.twitter.com/jPMm8jz8YR
இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள். இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
லியோ படம்:
அந்த வீடியோவில் அர்ஜுன் தெறிக்க என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை பார்த்த பலருமே வீடியோவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் விஷால் அவர்களும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியாது. ஆனால், இதன் உரிமையாளர் ஆக்சன் கிங் அர்ஜுன் சார். என்னுடைய குரு, ஆசான், முன்னோடி, நான் நடிகனானத்திற்கு காரணமான அர்ஜுன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
விஷால் பதிவு:
அவருக்கு வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செழுமை, மகிழ்ச்சியாகவே தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வாழ்விலும் கிடைக்க வாழ்த்துகிறேன். மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதோடு லியோ படத்தில் விஷால் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே லோகேஷ் சென்று லியோ படம் குறித்து கதை சொல்லி இருக்கிறார். விஷாலுக்கும் லியோ படத்தில் நடிக்க ஆசைதான். ஏற்கனவே விஷால், நான் தளபதியின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார்.
விஜய் அரசியல் குறித்து சொன்னது:
ஆனால், விஷால் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கிடைக்காததால் லியோ படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதனை அடுத்து மார்க் ஆண்டனி படத்தின் பிரஸ்மீட்டில் செய்தியாளர்கள், உங்களால் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது. அரசியலில் தளபதி, புரட்சி தளபதி இருவரும் இணைவீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஷால், கடவுள் அருள் இருந்தால் பார்க்கலாம்.
பொறுக்கினு Dialogue வேற😂- Mysskin | Adiyae Movie Audio & Trailer Launch
— SS Music (@SSMusicTweet) August 9, 2023
.
📷 https://t.co/wq7RQMvO3K
.#Adiyae #gvprakash #mysskin #leo #Thalapathyvijay #vishal #adiyaemovie #mysskinspeech #ssmusic pic.twitter.com/i8Syrq4JYk
லியோ வாய்ப்பு நிராகரிக்க காரணம்:
அரசியலில் வந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் இல்லை. நல்லது செய்யும் எல்லோருமே அரசியல்வாதிகள் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், லியோ படத்தில் மிஸ்கினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே துப்பறிவாளன் 2 பட பிரச்சனையால் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கடும் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டி தீர்த்தனர். இப்படி ஒரு நிலையில் லியோ படத்தில் மிஷ்கின் நடித்து வருவதால் தான் விஷால் இந்த படத்தின் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.