“நீட் தேர்வு மாணவர்களின் எதிரி அல்ல, திமுகவின் எதிரி” – திமுகவை குற்றச்சாட்டிய அண்ணாமலை.

0
1031
- Advertisement -

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொல்ல பள்ளி கூட வளாகத்தில் சாதிய வன்முறைகள் நடந்தேறியுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைபடாத முதல்வர் படங்களை பார்த்து வருகிறார் என்று அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இன்று முதற்கட்டமாக முடிவடைந்த பாதயாத்திரைக்கு பிறகு பாஜக மாநில தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறிய அவர் முதலமைச்சர் ஆன பிறகும் அவர் எதிர்க்கட்சி தலைவராகவே செயல் பட்டுவருகிறார் என்று அண்ணாமலை கூறினார்.

-விளம்பரம்-

அண்ணாமலை கூறியது:

நாங்குநேரியில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொல்ல பள்ளி கூட வளாகத்தில் சாதிய வன்முறைகள் நடந்தேறியுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைபடாத முதல்வர் படங்களை பார்த்து வருகிறார். முதலமைச்சர் ஆன பிறகும் அவர் எதிர்க்கட்சி தலைவராகவே செயல் பட்டுவருகிறார் என்று அண்ணாமலை கூறினார். இன்னுமும் வேண்ட வெறுப்பாக தான் செயல் படுகிறார். மேலும் வன்மத்தை தூண்டுகிறார். முதல்வர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் விரோத போக்கை ஏற்படுத்தி வருகிறார். இது ஒரு ஆட்சியில் .இருக்க கூடிய ஒருவர்க்கு அழகல்ல.

- Advertisement -

பொன்முடி அவர்கள் பொது மேடையில் மக்கள் பிரதிநீதியை  பட்டியலின சாதி பெயர் வைத்து திட்டுகிறார். தமிழகத்தில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் இன்னுமும் சாதி வன்மத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் அவர்களே சாதி பெயரை சொல்லி பேசினால் எப்படி சாதிகள் ஒழியும். சாதிய வன்மங்களை துண்டும்எத்தனை படங்களை எடுத்து வருகிறார்கள்.  கடந்த 6 மாதங்களில் எத்தனை படங்கள் உதயநிதி ஸ்டாலின் ஹீரோ ரெட் ஜெயண்ட் தயாரிப்பு இது எல்லாம் பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்து என்ன நினைப்பார்கள்.

படங்களை சமுக அக்கரையில் எடுப்பது வேறு ஒரு சமுகத்தை தாக்க எடுப்பது வேறு வன்மத்தை துண்டுவது போல எடுப்பது வேறு அதை முதலமைச்சரை வைத்து பாராட்டுகிறார். இது எல்லாம் மாற வேண்டும் வெறும் சட்டங்களைவைத்து மட்டும் அதை எல்லாம் செய்ய முடியாது. இது அனைத்தையும் சரி செய்தால் வன்முறைகள் குறையும்.

-விளம்பரம்-

நீட் பற்றி பேசிய அண்ணாமலை:

நீட் தேர்வு யாருக்கு எதிராக இருக்கிறது? எல்லா தரப்பு பட்ட மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நூற்றுகணக்கில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த வருடம் நரிக்குறவ பெண் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

திமுகவிடம் அனைத்து புள்ளி பட்டியல்களும் இருக்கும் அவர்களை அதை பார்க்க வேண்டும். முதல் பத்து மதிப்பெண்களில் 4 பேர் தமிழகத்தில் இருந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது நீட் யார்க்கு எதிரி என்று பார்க்க வேண்டும். நீட் தேர்வு திமுகவிற்கு மட்டும் எதிரி. மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டனர்.என்றும் அண்ணாமலை கூறினார்.       

Advertisement