ஒரே நேரத்தில் இருவருடனும் காதல் – சம்யுக்தா ஆடிய காதல் நாடகம். ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட விஷ்ணுகாந்த்

0
2891
- Advertisement -

கடந்த சில தினங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமண விஷயம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுகாந்த் தங்களுக்கு இன்னும் விவாகரத்து எல்லாம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் அவர் நண்பர்களுடன் பேசி வந்தால். அதை ஏன் என்று கேட்டதற்கு நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். சரி, நான் முக்கியமா அவன் முக்கியமா என்று கேட்டதற்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிவிட்டால் என்று சம்யுக்தா குறித்து பேசினார் விஷ்ணு.

ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று கூறிய சம்யுக்தா, அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார். ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர்கள் தான்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட ரவி என்னை விட்டு போகாதே என்று சம்யுக்தா கண்ணீர் விட்டு அழுது இருந்தார். இது எல்லாம் வெறும் ஸ்கிரிப்டாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. அவர்களும் இத்தோடு ரவியை விட்டு விடு என்று கூறியிருக்கிறார்கள்

ஆனால், சமிதா விஷ்ணுகாந்தி காதலிக்கும் போதே ரவியுடனும் சாட்டிங் செய்து இருக்கிறார் இது குறித்து சமித்தாவிற்கும் ரவிக்கும் பொதுவான நபர் ஒருவர் சம்யுக்தாவிடம் இது குறித்து கேள்வி கேட்கும் ஆடியோ ஆதாரம் ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த ஆடியோவில் விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஒருவரை காதலித்தார் என்று என்னிடம் சொல்லிவிட்டார் ஆனால் நான் ரவி வெறும் நண்பர் என்று தான் சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், விஷ்ணுகாந்துடன் நிச்சம் முடிந்த பின்னர் கூட ரவியிடம் உன்னை என்னால் மறக்க முடியவில்லை, நாம் ஒன்று சேர வேண்டும் என்றெல்லாம் சாட் செய்து இருக்கிறார். மேலும், விஷ்ணுகாந்த்திடம் ரவியை காதலித்த விஷயத்தை கூட மறைத்து இருக்கிறார். இதற்கு அந்த நபர் விஷ்ணுகாந்த் உன்னிடம் உண்மையாக இருந்திருக்கிறார். ஆனால், நீ தான் அனைவரிடத்திலும் கேம் ஆடி ஏமாற்றி இருக்கிறாய் என்று சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார்.

ஆனால், இதனை ஒப்புக் கொள்ளாத சந்தித்த ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவன் வாயாலே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அவரிடம் பழையபடி பேசினேன் என்று சப்பை கட்டு கட்டி இருக்கிறார். இந்த ஆடியோவானது தற்போது தற்போது வைரலாக பரவி வர விஷ்ணுகாந்த் எப்போது பேட்டி கொடுத்தாலும் உடனே லைவில் வந்து அதற்கு பதிலடி கொடுக்கும் சமியுத்தா இந்த ஆடியோ வெளியானதில் இருந்து எந்த ஒரு லைவிலும் வராமல் இருக்கிறார்.

Advertisement