பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் கொரானா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்று தான் சத்யா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை மையமாக கொண்டது. ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்டது தான் சத்யா சீரியல்.
சத்யா சீரியல் கதை:
மேலும், இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்தது. இந்த அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் புலம்பித் தள்ளி இருந்தார்கள். மேலும், மக்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் காரணமாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஷ்ணு நடிக்கும் புது சீரியல்:
இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் விஷ்ணு மற்றும் ஆயிஷா. இந்த ஜோடிகளை ரசிகர்கள் கொண்டாடுவதால் இவர்கள் நிறைய விளம்பரங்களில் கூட இணைந்து நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு குறித்த தகவல் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு வருத்தமான தகவல் என்று சொல்லலாம். அது என்னவென்றால், நடிகர் விஷ்ணு தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சத்யா சீரியலில் விஷ்ணு விலகினரா:
இந்த தொடரில் ரக்ஷிதா நாயகியாக நடிக்கிறார். கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் இன்னும் சில தினங்களில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதில் விஷ்ணு நடிக்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியாக என்றாலும் இனி சத்யா தொடரில் விஷ்ணு வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையிலும் உள்ளார்கள். இது குறித்து விஷ்ணு தான் பதில் சொல்ல வேண்டும். சத்யா சீரியலில் இருந்து விஷ்ணு வெளியேறி புதிய சீரியலில் நடிக்கிறாரா? அல்லது இரண்டிலுமே நடிக்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஷ்ணு நடித்த சீரியல், படங்கள்:
மேலும், தொலைக்காட்சி தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஷ்ணு குமார். இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் ஆபீஸ் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். தற்போது சத்யா சீரியல் மூலம் விஷ்ணு மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். மாப்பிள்ளை சிங்கம், இவன் யார் என்று தெரிகிறதா, 6 அத்தியாயம், களரி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் விஷ்ணு நடித்திருக்கிறார். தற்போதும் சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.