‘ஆயிஷா என்னை பிரிந்ததற்கு விஷ்ணு தான் காரணம்’ – தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்த விஷ்ணு.

0
396
vishnu
- Advertisement -

தன்னுடைய காதல் பிரிந்ததற்கு விஸ்ணு தான் காரணம் என்று ஆயிஷாவின் முன்னாள் காதலர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார் விஷ்ணு. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.அதன் பின்பு இவர் மாயா என்ற சீரியலில் நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

-விளம்பரம்-

பின் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றுகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆயிஷாவிற்கு இரண்டு திருமணம் ஆகி மூன்றாவதாக தான் என்னை காதலித்தார் என்று அவருடைய முன்னாள் காதலர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.சமீபத்தில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டியில் கூறியது, ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். அவரை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான் தான். இது பலருக்கும் தெரியும்.

எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை. நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் விஷ்ணு வரும்போது தான் எங்களுடைய பிரிவுக்கு பிரிவு உண்டானது. இப்போது விஷ்ணு ஆயிஷாவுடன் இல்லை என்று கேள்விப்பட்டேன்.இப்போ யோகேஷ் என்பவருடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் ஆயிஷா. பிக் பாஸ் வீட்டுக்குள் போற அன்னைக்கு கூட ஆயிஷாவை யோகேஷ் தான் வழி அனுப்பி வைத்தாராம்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணங்கள் ஆகிவிட்டது. அதை மறைத்து தான் அவர் என்னை காதலித்து இருந்தார். சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த சீரியலின் ஹீரோ விஷ்ணுவையும் காதலித்து இருந்தார். பின் அவரை கழட்டிவிட்டார். இப்போது என்னுடைய தங்கையின் காதலன் யோகேஷை காதலித்து வருகிறார் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தேவ்வின் குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் விஷ்ணு பதில் அளித்துள்ளார்.

அதில் சித்ராவின் இறப்பு குறித்து டிடி ஒரு மேடையில் ‘ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு தப்பான பொருளை தேர்ந்தெடுத்துவிட்டால் அதை யோசிக்காமல் கீழே வைத்துவிடுங்கள். அவன் என்ன சொல்லுவான், இவள் என்ன பேசுவாள் என்றெல்லாம் யோசிக்காதீர்கள்’ என்று உருக்கமுடன் பேசியதை போட்டு காண்பித்து ஆயிஷா இந்த வீடியோவில் இருப்பது போல ஒரு தப்பான பொருளை எடுத்து இருக்கிறார் அதனால் தான் அவர் அவனை விட்டு வந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

Advertisement